SIP முதலீடு செய்பவரா நீங்க.. இதெல்லாம் தெரியாம பணத்தை போட்டால்.. அவ்வளவு தான், உஷார்!
கல்லூரி மாணவர்கள் முதல் ஒய்வு பெற்றவர்களை வரையில் சிஸ்டமாடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்படும் SIP என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான முதலீட்டு முறையாக மாறியுள்ளது. மாதம் மாதம் சிறு தொகையை பங்குச் சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் நீண்டகால செல்வத்தை உருவாக்கும் இந்த முறை, மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரிடையே முக்கிய முதலீட்டு பிரிவாக உள்ளது.
இதேபோல் தற்போது சந்தை முதலீட்டு வல்லுநர்கள் SIP மூலம் நீண்ட காலம் முதலீடு செய்யும் போது ஸ்டெப் அப் முதலீடு முக்கியம் என கூறுகின்றனர். ஆனால் SIP தொகையை அதிகரிக்கும் முன், சில முக்கிய சோதனைகளில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில், உங்கள் நிதி நிலைமை சிக்கலாகிவிடும்.

9 மாத செலவுகளுக்கு அவசர நிதி
SIP தொகையை அதிகரிப்பதற்கு முன் முதல் சோதனை உங்கள் அவசர நிதி பற்றியது. வாடகை, உணவு, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை தேவையை பூர்த்து செய்ய குறைந்தபட்சம் 9 மாதங்களுக்கான அன்றாட செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு உங்கள் சேமிப்பு இருக்க வேண்டும்.
இந்த சேமிப்பு வேலை இழப்பு, உடல்நலக் கோளாறு அல்லது எதிர்பாராத அவசரத் தேவை ஏற்பட்டால், அந்த நிதியைப் பயன்படுத்தி SIP-ஐ தொடர்ந்து செலுத்த முடியும். அவசர நிதி இல்லாத நிலையில் SIP தொகையை அதிகரித்தால், அவசரத்தில் அந்த முதலீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது உங்கள் நீண்டகால இலக்குகளை பாதிக்கும், லாபத்தையும் இழக்க நேரிடும்.
அதிக வட்டி கொண்ட கடன்கள்
இரண்டாவது முக்கிய சோதனை உங்கள் கடன் நிலைமை. கிரெடிட் கார்டு பாக்கி அல்லது தனிநபர் கடன் போன்ற அதிக வட்டி கொண்ட கடன்கள் இருந்தால், SIP தொகையை அதிகரிக்கக் கூடாது. SIP மூலம் 12-15% வருமானம் கிடைத்தாலும், கடன் வட்டி அதைவிட அதிகமாக இருந்தால், நீங்கள் உண்மையில் நஷ்டத்திலேயே இருப்பீர்கள்.
முதலில் அந்த அதிக வட்டி கடன்களை அடைத்துவிட்டு, அதன் பிறகு SIP-ஐ அதிகரிப்பது புத்திசாலித்தனமான முடிவாகும். இது உங்கள் நிதி அழுத்தத்தை குறைத்து, முதலீட்டின் உண்மையான பலனை அனுபவிக்க உதவும்.
வருமானம்
மூன்றாவது சோதனை உங்கள் வருமானம் தொடர்பானது. SIP தொகையை அதிகரிப்பதற்கு முன், உங்கள் மாதாந்திர சம்பளம் அல்லது முதன்மை வருமானம் அதிகரித்திருக்க வேண்டும். சந்தை உயர்வு அல்லது உங்கள் நண்பர் அதிகம் முதலீடு செய்வதால் SIP-யில் நீங்களும் முதலீட்டை அதிகரிப்பது என்பது தவறான முடிவு.
வருமானம் அதிகரித்தால் மட்டுமே கூடுதல் தொகையை முதலீடு செய்வது நிதி ரீதியாக பாதுகாப்பானது. இது உங்கள் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தி, எதிர்காலத்தில் பெரிய இலக்குகளை எளிதாக அடைய உதவும்.
முக்கியமான அட்வைஸ்
SIP தொகையை அதிகரிப்பதற்கான சரியான நேரம், உங்கள் வருமானம் உயர்ந்து, நிதி நிலைத்தன்மை மேம்பட்டு, பணப்புழக்கம் வலுவடையும் போதுதான் செய்ய வேண்டும். சந்தை உயர்வு அல்லது அருகில் உள்ளவர்கள் அதிகம் முதலீடு செய்வதால் அவசரப்பட்டு SIP-ஐ அதிகரிப்பது பலருக்கு பிற்காலத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மேற்கண்ட மூன்று சோதனைகளையும் தேர்ச்சி பெற்ற பிறகு மட்டுமே SIP தொகையை அதிகரிக்க வேண்டும்.
இந்த எளிய விதிகளை பின்பற்றினால், உங்கள் SIP முதலீடு உண்மையான செல்வத்தை உருவாக்கும் கருவியாக மாறும். திட்டமிட்டு, பொறுமையுடன் முதலீடு செய்வதே நீண்டகால நிதி வெற்றிக்கான ரகசியம்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications