Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை உலுக்கிய டிசிஎஸ் நாசிக் ஆபீஸ்.. நேரடியாக தலையிட்ட டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் மீது சில கடுமையான புகார்கள் வந்துள்ளன. இதனால் கடும் கோபமடைந்துள்ள டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என எச்சரித்துள்ளார். டிசிஎஸ் சிஓஓ ஆர்த்தி சுப்ரமணியன் நேரடியாகக் களமிறங்கி விசாரணை நடத்தப்போவது கார்ப்பரேட் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் பிபிஓ கிளையில் இந்துப் பெண்களுக்கு எதிராக நடந்த திட்டமிட்ட பாலியல் சுரண்டல் மற்றும் மதமாற்ற முயற்சி பற்றி செய்திகள் வெளியாகி உள்ளது. நாசிக் டிசிஎஸ் கிளையில் பணியாற்றும் பல இந்துப் பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஊழியர் புகார் அளித்துள்ளனர். அங்கு பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலர் திட்டமிட்டு இந்துப் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் அவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததது. அத்துடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியது போன்ற புகார்களும் எழுந்துள்ளன.

இந்தக் கொடுமைகள் 2022-லேயே தொடங்கியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்கள் எச்.ஆர் துறையில் புகார் அளித்தும், அதன் தலைவரான நிதா கான் என்பவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசாரின் விசாரணையில், அங்குள்ள சில முஸ்லிம் ஊழியர்கள் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் இளம்பெண்களை எப்படிக் குறிவைப்பது, அவர்களுக்குப் பண ஆசை காட்டி எப்படி மதமாற்றம் செய்வது என்று திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நாசிக் மாநகர காவல்துறை இதுவரை 9 எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. ஆசிப் அன்சாரி, ஷபி ஷேக், ஷாரூக் குரேஷி, ரசா மேமன், தௌசிப் அத்தர் மற்றும் டேனிஷ் ஷேக் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்தச் சம்பவத்தை "அதிர்ச்சியானது" என்று கூறியதுடன், உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார். இதற்காக சிறப்பு விசாரணை கு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக் மேற்பார்வையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

டிசிஎஸ் நிறுவனத்தின் விளக்கம்

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, டிசிஎஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்ட அனைத்து ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிறுவனம் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். பாலியல் தொல்லைகளுக்குத் தங்கள் நிறுவனத்தில் இடமே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS Nashik probe

இதனிடைமயே டாடா குழுமத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்தச் சம்பவம் இருந்ததால், டாடா சன்ஸ் தலைவர் நேரடியாக இதில் தலையிட்டிருக்கிறார். என்.சந்திரசேகரன் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் "கவலை அளிப்பதாகவும், வேதனை தருவதாகவும்" இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மீது ஏற்கனவே ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ஊழியர்களின் எந்தவொரு தவறான நடத்தைக்கும் அல்லது வற்புறுத்தலுக்கும் டாடா குழுமத்தில் இடமே இல்லை என்பதை என்.சந்திரசேகரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, டிசிஎஸ் நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி ஆர்த்தி சுப்ரமணியன் இந்த விசாரணைக்குத் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் எப்போதும் தனது நேர்மைக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் அறியப்படுவது. அங்கே இதுபோன்ற புகார்கள் எழுவது பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ல் நடக்கும் இத்தகைய விசாரணைகள் முதலீட்டாளர்கள் மத்தியிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிளை அலுவலகத்தில் நடந்த பிரச்சினைக்கு நிறுவனத்தின் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் தலைவர் (Chairman) அறிக்கை விடுவது, இந்த விவகாரம் எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுவதாக ஐடி ஊழியர்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+