TCS: அடுத்தடுத்து அடிவாங்கும் டிசிஎஸ் ஊழியர்கள்.. நிதா கான் வாங்கிய அதே அடி இப்போ டேனிஷ் எஜாஸ் ஷேக்
நாசிக் நீதிமன்றம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஊழியர் டேனிஷ் எஜாஸ் ஷேக் தாக்கல் செய்த இடைக்கால முன்ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது. மும்பை நாகா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மத உணர்வுகளை புண்படுத்திய வழக்கில் கைதாகியிருக்கும் டேனிஷ் எஜாஸ் ஷேக்-கிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
இதேபோல நாசிக் நீதிமன்றம் திங்கட்கிழமை, டிசிஎஸ் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிதா கானுக்கு இடைக்கால கைது தடை வழங்க மறுத்துவிட்டது. மேலும், போலீசுக்கு ஏப்ரல் 27-ம் தேதி பதில் அளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நிதா கான் 2 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

ஏப்ரல் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை டேனிஷ் எஜாஸ் ஷேக் மனுவை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வி.வி. கதாரே விசாரித்த நிலையில் இந்த உத்தரவை வழங்கினார். எப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக நீதிபதி கூறினார்.
"மனுதாரருக்கு எதிராக ஏற்கனவே தீவிர குற்றப் பின்னணி உள்ளது. இந்த வழக்கை தனித்து பார்க்க முடியாது. இந்த குற்றம் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை பாதிக்கும்" என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஷேக்கை விடுவித்தால் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
டிசிஎஸ் ஊழியர் கிருஷ்ணா மானே 2022 முதல் தன் சக ஊழியர்களான டேனிஷ் எஜாஸ் ஷேக், தவுசிப் அட்டார் உள்ளிட்டோர் தனது இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்தியதாக புகார் அளித்தார். இஸ்லாத்தை புகழ்ந்தும், இந்து மதத்தை தாழ்த்தியும் பேசியதாகவும், குர்ஆன் படிக்கவும், அசைவ உணவு உண்ணவும் நிர்பந்தித்ததாகவும், மிரட்டியதாகவும், பெண் ஊழியர்களுக்கு பாலியல் சார்ந்த கமெண்ட் செய்தாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
டேனிஷ் எஜாஸ் ஷேக் தற்போது நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தியோலாலி போலீஸ் நிலையத்தில் டேனிஸ் சக பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கிலும் அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
டேனிஷ் எஜாஸ் ஷேக் சார்பில் வழக்கறிஞர் உமேஷ் வால்ஜடே மனு தாக்கல் செய்தார். ஆனால் அரசு வழக்கறிஞர் கிரண் பெண்ட்பார் எதிர்ப்பு தெரிவித்தார். சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை கவனித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நீதிமன்றம் போலீசாருக்கு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஏப்ரல் 27-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications