மாத சம்பளம் உயரப்போகுது.. சென்னை, கோவைக்கு ஜாக்பாட்.. அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட சூப்பர் கணிப்பு
சென்னை: தனி ஒருவரின் சம்பளம் உயர்ந்தால் தான், அந்த நாட்டின் பொருளாதாரமே உயரும். ஏனெனில் வருமானம் அதிகரித்தால், செலவு அதிகம் செய்வார். அதன் மூலம் பலருக்கும் வேலை கிடைக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும். எனவே சம்பளம் உயர்வது என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல நாட்டுக்கே நல்லது. இந்த ஆண்டு இந்தியாவில் உற்பத்தி, ஆட்டோமொபைல்ஸ் துறைகள் அபரிமிதமாக வளரகிறது எனறும். எனவே வரும் ஆண்டில் இந்திய ஊழியர்களின் சம்பளம் 9 சதவீதம்வரை உயர உள்ளதாக பிரபல அமெரிக்க நிறுவனம் கணித்திருக்கிறது.
ஒரு சாதாரண ஊழியரின் சம்பள உயர்வு காரணமாக சிறந்த உணவு, கல்வி, மருத்துவம் மற்றும் வசதியான வாழ்விடத்தை பெற முடிகிறது. அவருக்கு உபரி வருமானம் கிடைப்பதால், வங்கியில் சேமிக்கவோ அல்லது தங்கம், நிலம், பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்யவோ வாய்ப்பு உருவாகிறது. இது எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும். அதேபோல் கடன் சுமைகள் குறைந்துவிடும். நிதி சுதந்திரம் கிடைக்கும்.
இதெல்லாம் தனிப்பட்ட நன்மை; அதேநேரம் தனிநபரின் வருமான உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகிறது.

வருமானம் அதிகரிக்கும்போது குடும்பச் செலவுகள் உயரும்; இதனால் நுகர்வு அதிகரிப்பதன் மூலம் உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சி வேகமெடுக்கும். சம்பளம் உயரும்போது, அந்த நபர் அதிக பொருட்களை வாங்குவார்.கார், எலக்ட்ரானிக் பொருட்கள், வீடு மற்றும் நகை வாங்குவோர். இதனை தயாரிக்கும் தொழில்கள் மேம்பாடும். மக்கள் பொருட்களை அதிகம் வாங்கும்போது, உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து, வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும். இந்தச் சங்கிலித் தாக்கமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தும்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு நிறுவனமாக மெர்சர் இந்தியாவில் ஆய்வு நடத்தியது. இதில் வரும் ஆண்டில்(2026) ஊழியர்களின் சம்பளம் 9 சதவீதம்வரை அதிகரிக்கும் என கணித்துள்ளது. இந்தியாவில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில், வரும் ஆண்டில் 9 சதவீத சம்பள உயர்வை இந்திய நிறுவனங்கள் அறிவிக்கும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. நாட்டின் உற்பத்தி மற்றும் என்ஜினீயரிங் துறை மற்றும் ஆட்டோமொபைல் துறை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது என்றும் சம்பள விஷயத்தில் இந்த நிறுவனங்கள் முன்னணியில் இருக்கும் என்றும் அவை 9.5 சதவீதம் வரை சம்பள உயர்வு அறிவிக்கும் என்றும் கணித்துள்ளது.
அதேபோல் தொழில் போட்டி காரணமாக ஐ.டி., நிதித்துறை, ஆய்வு மற்றும் வளர்ச்சித்துறைகளில் 9 சதவீத சம்பள உயர்வு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் மெர்சர் நிறுவனம் கூறியுள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்க வரிவிதிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பொருளாதார சவால்களால் இந்தியாவில் மக்களின் வாங்கும் திறன் குறைந்து வருகிறது. இந்த சூழலும் சம்பள உயர்வு இருக்கும் என்பது நாட்டின் பொருளாதாரம் நல்லநிலையில் இருப்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.
அதேநேரம் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கிலும்,வேலைவாய்ப்பு சந்தையில் திறமையான ஊழியர்களை ஈர்த்துதக்க வைத்துக் கொள்ளும் முயற்சியிலும் நிறுவனங்கள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றி வருகின்றனவாம்.. தற்போதைய நிலையில் வரும் ஆண்டில் புதிய வேலைவாய்பபுகள் என்பது 32 சதவீத நிறுவனங்கள் மட்டுமே திட்டமிட்டுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகள், ஆட்டோமொபைல் துறை அதிக அளவில் வளருவது தமிழ்நாட்டிற்கு சாதமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த இரணடுதுறை சார்ந்த நிறுவனங்கள் சென்னை மற்றும் கோவையில் அதிக அளவில் உள்ளன. எனவே இந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஐடி ஊழியர்கள் இந்த முறை சம்பள உயர்வை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications