ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சம்பளம் எவ்வளவு? அதை விட முக்கிய சலுகை ஒன்னு இருக்கு.. மதிப்பு ரூ.450 கோடி
டெல்லி: ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் ஆர்பிஐ கவர்னராக பதவியேற்றார். இதற்கிடையே நமது நாட்டில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்கும் ஒருவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராகக் கடந்த 6 ஆண்டுகளாக இருந்தவர் சக்திகாந்த தாஸ். அவருக்கு ஏற்கனவே 2021ல் ஒரு முறை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஒரு முறை பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்பட்டது.

ரிசர்வ் வங்கி புதிய ஆளுநர்: புதிய இருப்பினும், அப்படி நடக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார். வருவாய்த் துறை செயலாளராக இருந்த சஞ்சய் மல்ஹோத்ரா, நேற்று டிச. 11ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவியேற்றார். அடுத்த 3 ஆண்டுகள் அவர் தான் நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் பாலிசிக்களை வடிவமைக்கப் போகிறார்.
இந்தச் சூழலில் ரிசர்வ் வங்கியின் கவர்னரின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து நாம் பார்க்கலாம். இதற்கு முன்பு ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸ் மாதம் ரூ. 2.5 லட்சமாக இருந்தது.. அவருக்கு முன்பு ஆர்பிஐ கவர்னராக இருந்த உர்ஜித் படேலும் அதே சம்பாதித்ததையே பெற்று வந்தார். ஆர்பிஐ கவர்னரின் ஊதியம் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர்களின் ஊதியம் குறித்த தகவல்கள் கிடைத்தது.
துணை ஆளுநர்களின் சம்பளம் எவ்வளவு: அங்கு கவர்னர்களுக்கும் துணை கவர்கனர்களுக்கும் கிட்டதட்ட ஒரே சம்பளம் தான். அதாவது சக்திகாந்த தாஸ் கவர்னராக இருந்த போது, எம்.டி. பத்ரா, எம். ராஜேஷ்வர் ராவ், எம்.கே. ஜெயின், டி.ரபி சங்கர் ஆகிய நான்கு பேரும் துணை கவர்னர்களாக இருந்தனர். அவர்கள் நான்கு பேருமே மாதம் ரூ.2.25 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளனர். ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர்களான அனில் குமார் சர்மா, ஷிரிஷ் சந்திர முர்மு, ஓம் பிரகாஷ் மால் மற்றும் மிருதுல் குமார் சாகர் ஆகியோர் மாதம் ரூ.2.16 லட்சத்தைச் சம்பளமாகப் பெற்றுள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவருக்கு வழங்கப்படும் சம்பளமும் எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் காராவின் சம்பளமும் ஒரே அளவில் இருக்கிறது. சொல்லப் போனால் ரிசர்வ் வங்கியின் கவர்னரின் ஊதியம் சற்று குறைவாகவே இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் மாதம் ரூ. 2.5 லட்சம் சம்பளம் வாங்கிய நிலையில், எஸ்பிஐ வங்கி தலைவர் மாத சம்பளமாக ரூ. 27 லட்சமும், அகவிலைப்படியாக ரூ. 7.42 லட்சம் பெற்று இருக்கிறார்.
ரொம்பவே குறைவு: இது உங்களுக்குப் பெரிய தொகை போலத் தெரியலாம். ஆனால், உண்மையில், தனியார் வங்கிகளின் இயக்குநர்கள் பெறும் சம்பளத்தை விட இது மிக மிகக் குறைவு. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் நாட்டின் முன்னணி தனியார் நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கெக்கி மிஸ்ட்ரி 2022ஆம் நிதியாண்டில் ரூ.19 கோடியை ஆண்டு சம்பளமாகப் பெற்று இருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டு முதலே ரிசர்வ் வங்கி மற்றும் பொதுத்துறை வங்கியில் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப் பெரிய சலுகை: 2013- 2016 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் தனது சம்பளம் குறித்து முன்பு ஒரு பேட்டியில் கூறுகையில், "நான் ஆளுநராக இருந்த போது எனக்கு ஆண்டுக்கே ரூ.4 லட்சம் தான் சம்பளம். ஆனால், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கிடைக்கும் பெரிய சலுகை என்றால் அது வீடு தான். மும்பையின் மலபார் ஹில் பகுதியில் திரிபாய் அம்பானியின் வீட்டிற்கு அருகிலேயே உங்களுக்கு வீடு ஒதுக்கப்படும்.
சும்மா ஒரு முறை யோசித்துப் பார்த்தேன். இந்த வீட்டை விற்றால் அல்லது லீஸுக்கு விட்டாலே 450 கோடி ரூபாய் கிடைக்கும். அந்தளவுக்குப் பெரிய வீடு. அதை காலி செய்துவிட்டு வர மனசே வராது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications