"எலி பொறி தெரியுமா.. அப்படிதான் இது.." உடைத்து பேசும் ஆனந்த் சீனிவாசன்! தப்பி தவறியும் சிக்கிடாதீங்க
சென்னை: இந்தக் காலத்தில் நம்மில் பலரும் கிரெடிட் கார்டுகளை வாங்கி பயன்படுத்துகிறோம். அதுவும் பல நேரங்களில் நாம் கிரெடிட் கார்டுகள் தரும் சலுகைகளுக்காகவே அவற்றைப் பயன்படுத்துகிறோம். உண்மையில் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும்போது மட்டும் சலுகைகள் கிடைப்பது எப்படி! இதன் பின்னணி என்ன என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் எளிதாக விளக்குகிறார் இது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் ஆன்லைனிலும் சரி, கடைகளிலும் சரி நாம் பொருட்களை வாங்கும் போது விநோதமான ஒரு நடைமுறையைச் சொல்கிறார்கள். அதாவது ரெடியாக பணம் கொடுத்தால் அல்லது டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) மூலம் பொருட்களை வாங்கினால் எந்தவொரு சலுகையும் இருக்காது. அதேநேரம் கடன் அட்டை அதாவது கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கினால் ஆயிரக்கணக்கில் சலுகைகளைத் தருவார்கள்.

கிரெடிட் கார்டு
அட கை காசு உடனே போட தேவையில்லா.. மாதம் மாதம் மெல்லக் கட்டினால் போதும்.. இப்படி கடன் வாங்கினால் கூடுதல் சலுகையா என்று பலரும் அதையே விரும்புவார்கள். ஆனால் ஆனந்த் சீனிவாசன் தொடக்கம் முதலே கையில் காசு இருந்தால் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து கூறி வருபவர். இதுபோன்ற இஎம்ஐ-களுக்கு மட்டும் ஏன் ஆஃபர் வருகிறது என்பதை எளிமையாகப் புரியும் வகையில் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "இது ரொம்பவே சிம்பிள்.. உங்களுக்கு வைக்கும் பொறி தான் அது. இப்போது கிரெட்டி கார்டு வாங்க அளவு இல்லை. இதனால் நீங்கள் ஒவ்வொரு பொருளையும் வாங்கும்போது ஒவ்வொரு கிரெட்டி கார்டை வாங்குவீர்கள். கிரெடிட் கார்டு இல்லாதவர்களையும் கிரெடிட் கார்டை வாங்க வைக்கவே இந்த சலுகைகளை அறிவிக்கிறார்கள்.
எலிக்கு வைக்கும் பொறி தான்
முன்பு ஆப்பிள் நிறுவனத்திற்கும் ஹெச்டிஎஃப்சி நிறுவனத்திற்கும் இதுபோலத் தான் ஒரு டை-அப் இருந்தது. இதுபோல ஒரு சலுகையைக் காட்டி நிறைய கிரெடிட் கார்டுகளை விற்பதே அவர்கள் திட்டம். இது எலிக்குப் பொறி வைப்பது போலத் தான். நிறையப் பேருக்கு கார்டு விற்க வேண்டும் என்பதற்காகவே இதுபோல செய்கிறார்கள். எனக்குத் தெரிந்தே பல இளைஞர்கள் பல கிரெடிட் கார்டுகளை வைத்துள்ளனர். பெட்ரோல் போட ஒரு கார்டு, ஷாப்பிங் போக ஒரு கார்டு, சினிமா டிக்கெட் வாங்க ஒரு கிரெடிட் கார்டு என வகை வகையாக வைத்திருப்பார்கள். உங்களைக் கடனாளியாக மாற்ற ஒரு வழிதான் இது.
எச்சரிக்கை தேவை
நாளை திடீரென உங்களுக்கு எதாவது பணத் தேவை வந்தால் யோசிக்காமல் கிரெடிட் கார்டில் கடன் வாங்குவீர்கள். நான் கடனே வாங்க மாட்டேன்.. பக்காவே இருப்பேன் என்றால் நீங்கள் இந்த ரிஸ்க்கை எடுக்கலாம். ஆனால், உங்களைக் கடன் வாங்க ஃபோர்ஸ் செய்வதே இதுபோன்ற திட்டங்கள். நீங்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை ஒரு நாள் தாமதமாகக் கட்டினால் கூட ரூ.500ஐ அபராதம் என வாங்கிவிடுவார்கள். இதில் கண்ணுக்கே தெரியாமல் பல கட்டணங்களும் இருக்கும். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு கையில் வந்துவிட்டாலே நாம் நினைத்ததை எல்லாம் வாங்கத் தொடங்கிவிடுவோம். அதன் பிறகு கடன் கட்ட முடியவில்லை என்று தவிப்போம். ரூ.1000 பாக்கி வைத்தால் கூட அதற்கு அபராதம் என ரூ.2000ஐ உங்களிடம் இருந்து வசூலித்துவிடுவார்கள்" என்று அவர் எச்சரிக்கும் வகையில் அட்வைஸ் செய்தார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications