Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2026ல் தங்கம் விலை "இப்படி" தான் இருக்கும்.. 2025ஐ போல லாபத்திற்கு வாய்ப்பில்லை-ஆனந்த் சீனிவாசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் தங்கம் பெரியளவில் லாபம் தருமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக விளக்கியுள்ளார். தங்கம் விலை கடந்தாண்டு போலவே லாபத்தை அள்ளி கொடுக்குமா! விலை குறைந்தால் எந்தளவுக்குக் குறையும் என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார்.

2025ல் தங்கத்தை போல வேறு எந்தவொரு முதலீடும் நமக்குப் பெரியளவில் லாபம் கொடுக்கவே இல்லை. கடந்த ஒரே ஆண்டில் தங்கம் விலை சுமார் 70%க்கு மேல் உயர்ந்து இருந்தது. வரலாறு காணாத லாபத்தை அள்ளி கொடுத்திருந்தது. இப்போது 2026 வந்துவிட்ட நிலையில், தங்கம் இதே அளவுக்கு லாபத்தைக் கொடுக்குமா என்ற கேள்வி மக்களிடையே வந்துவிட்டது.

Anand Srinivasan gold personal finance

ஆனந்த் சீனிவாசன்

இதற்கிடையே பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக விளக்கியுள்ளார். தங்கம் விலை 2025ஐ போலவே இந்தாண்டு உயர வாய்ப்பு இருக்கிறதா.. எந்தளவுக்கு அது உயரும் என்பது தொடர்பாக அவர் விரிவாக விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், "இன்றைய தினம் தங்கம் விலை சரிந்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தபட்ச நிலையை எட்டிவிட்டது என்றே நினைக்கிறேன்.. இதே ட்ரெண்ட் தொடர்ந்தால் கொஞ்சம் குறையலாம். வெள்ளி விலையில் மாற்றம். அதேநேரம் இன்னுமே வெள்ளியில் வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் வித்தியாசம் இருக்கவே செய்கிறது. ரூபாய்க்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சற்றே உயரலாம். இருப்பினும், அமெரிக்காவில் இப்போது கிறிஸ்துமஸ்- புத்தாண்டு விடுமுறை. இதனால் மார்க்கெட் பெரிதாக இருக்காது. அடுத்த வாரம் தான் மார்கெட் சூடுபிடிக்கவே ஆரம்பிக்கும்.

2025- தங்கம்

2025ல் தங்கம், வெள்ளி இரண்டுமே உச்சம் தொட்டது. வெள்ளி இன்னுமே புதிய உச்சத்தில் தான் இருக்கிறது. தங்கம் விலை உச்சம் தொட்டுக் கொஞ்சம் குறைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகே 2025ல் ஒரே ஆண்டில் இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. 1979ல் இதே அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. இருப்பினும், அப்போது பெடரல் வங்கி கவர்னர் வோல்கர் (வட்டி விகிதத்தை உயர்த்தி) பிரஷர் போட்டார். இதனால் தங்கம் விலை கட்டுக்குள் வந்தது. இப்போதும் அதே அளவுக்குத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆனால், இப்போது யாரும் வோல்கர் மாதிரி கட்டுப்பாடுகளை விதிக்க மாட்டார்கள்.

2026 எப்படி இருக்கும்!

2026ல் கடந்தாண்டைப் போல லாபம் கிடைக்காது. அதில் பாதி அளவுக்கு லாபம் கிடைக்கலாம். ஏனென்றால், அமெரிக்க பெடரல் கூட்டத்தில் அடிதடி அளவுக்கு கருத்து மோதல் இருக்கிறது. ஒரு சிலர் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்கிறார்கள். மற்றொரு தரப்பினர் வட்டி விகித குறைப்பு வேண்டாம் என்கிறார்கள். எனவே, 2026ல் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே வட்டி குறைப்பு இருக்கும் என்கிறார்கள்.

ஓவர் எதிர்பார்ப்பு வேண்டாம்

அமெரிக்காவில் டாலர் மதிப்பு சரிவதால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழல்களில் வட்டி விகிதம் குறைக்கப்படாது. எனவே, அப்போது தங்கமும் மிக பெரியளவில் உயராது. அதற்காகத் தங்கம் விலை உடனே விழும் என்று அர்த்தமில்லை. ஆனால், கிராமுக்கு 18000- 19000 எனப் போவதற்குப் பதிலாக 14,000- 15,000 என போகலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தங்கம் விலை உயர்வு என்பது அமெரிக்க வட்டி குறைப்பு பொறுத்தே இருக்கும். எனவே, நாம் பொறுமையாக இருக்க வேண்டும். தாறுமாறாகப் பேட்டை சுத்தி மாட்டிக்கொள்ள முடியாது.

அமெரிக்காவில் இப்போது பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாகவே இருக்கிறது. இதனால் அங்கு வட்டியைக் குறைக்க எந்தவொரு அவசியமும் இல்லை. எனவே, தங்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது சரியாக இருக்கும். 2025ஐ போல மிக பெரிய லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்க வேண்டாம்" என்றார்

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+