Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மசூதி எரிப்பு முதல் பாஜக முதலமைச்சர் பேச்சு வரை.. ஹரியானா வன்முறை! நடப்பது என்ன? 10 முக்கிய விசயம்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் யாத்திரையின்போது வெடித்த மதவாத வன்முறைகளால் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இது குறித்த 10 முக்கிய கருத்துக்களை பார்ப்போம்.

1. அரியானா மாநிலம் மேவாத் மாவட்டத்தில் நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்பினருடன் இணைந்து 130 கிமீ தூர பிரஜ் மண்டல் யாத்திரையை மேற்கொண்டது.

10 important points to be observed in Haryana religious violence

2. இந்த யாத்திரைக்கு முன்பாகவே உளவுத்துறை நுஹ் நகரில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள் ஊர்வலம் சென்றால் பிரச்சனை ஏற்படும். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் வாள்களை சுழற்றிக்கொண்டு மதவெறுப்பு முழக்கங்களை எழுப்பியவாறு செல்வார்கள் என அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

3. உளவுத்துறை எச்சரித்ததைபோன்றே யாத்திரைக்கு முன்பாக விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் மத வெறுப்பு முழக்கங்களை எழுப்பியவாறு வீடியோக்கள், கருத்துக்களை வெளியிட்டனர்.

10 important points to be observed in Haryana religious violence

4. குறிப்பாக ராஜஸ்தானில் பசுவுக்காக நசீர், ஜுனைத் ஆகிய இளைஞர்களை அடித்து கொலை செய்த வழக்கில் முதன்மை குற்றவாளியான பசு பாதுகாப்பை அமைப்பை சேர்ந்த மோனு மானேசர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதாக வீடியோ வெளியிட்டவுடன் இஸ்லாமியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அவர் அதில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

5. விஷ்வ இந்து பரிஷத் யாத்திரை தொடர்பாக உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையை அரியானா மாநில அரசு அப்பகுதி காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்த தவறியது கூடுதல் போலீஸ் படைகளையும் அரசு குவிக்கவில்லை என அங்குள்ள காவல் நிலைய போலீசாரே தெரிவித்தனர்.

6. காலை 10 மணிக்கு யாத்திரை தொடங்கிய நிலையில் ஆயிரக்கணாக்கானோர் 12 மணியளவில் மதவெறி கோஷங்கள் எழுப்பியதுடன் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உளவுத்துறை எச்சரிக்கையை மீறி இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்ல விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முயன்றபோது இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து இருக்கிறது.

10 important points to be observed in Haryana religious violence

7. இந்த வன்முறை மேவாட், குருகிராம் வரை பரவியது. குருகிராமில் உள்ள ஒரு மசூதிக்கு தீ வைத்த 80க்கும் மேற்பட்டோரை சேர்ந்த கும்பல், 19 வயது இமாமை முஹம்மது சாத் கொடூரமாக தாக்கி கொலை செய்தது. பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த 22 வயதான அபிஷேக் என்ற இளைஞரும் கொல்லப்பட்டார். இதில் இதுவரை 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

9. வன்முறையை தடுப்பதாக கூறி நேற்று வரை இணைய சேவையையும் துண்டிப்பதாக மாநில அரசு அறிவித்தது. 8 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரியானா மாநில பாஜக அரசு தவறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

10. அரியானா வன்முறைக்கு காரணம் மோனு மானேசர்தான் என்று பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவர் குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று கைவிரித்து இருக்கிறார் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார். அதே நேரம் அவர் மீது ராஜஸ்தான் காவல்நிலையத்தில் வழக்கு இருப்பதால், அவரை பிடிக்க ஹரியானா அரசு உதவும் எனவும் அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+