பாஜக ஆட்சியமைந்தால் பஞ்சாப் மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டம்.. அமித்ஷா அதிர்ச்சி
சண்டிகர்: தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் பகுதிகளில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு பாஜக குறிவைத்து பணியாற்றி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒரு மாதத்தில் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என அமித்ஷா பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. பாஜக சார்பில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்தாலும் ஒரு சில மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. அதேபோல பஞ்சாப் மாநிலத்திலும் பாஜக வெற்றி பெற முடியவில்லை. [Amit Shah]

பஞ்சாப் அமித்ஷா
அங்கு அம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலுவாக உள்ளன. இந்தாண்டு நடைபெறும் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பாஜக தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது. அதனுடன் அடுத்த வருடம் நடைபெறவுள்ள பஞ்சாப் தேர்தலுக்கும் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பின் மோகா பகுதியில் நடைபெற்ற பாஜக பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமித்ஷா, "பஞ்சாப்பில் பாஜக மாற்றத்தை கொண்டு வரும். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்லில் பஞ்சாப்பில் பாஜக 19 சதவீத வாக்குகளை பெற்றது. இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். எப்போதெல்லாம் பாஜக 19 சதவீதம் வாக்கு வாங்கியுள்ளதோ, அதன் பிறகு அங்கு பாஜக ஆட்சியமைத்துள்ளது. ஒடிசா, அசாம், மணிப்பூர், திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களில் நடந்துள்ளது.
மத மாற்ற தடைச் சட்டம்
அது பஞ்சாப்பிலும் நடக்கும். பஞ்சாப் முழுவதும் மத மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இதனால் இந்து மற்றும் சீக்கிய சகோதரர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அடுத்த வருடம் நடைபெறும் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒரு மாதத்தில் மத மாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளிக்கிறேன்" என கூறியுள்ளார்.
அங்குள்ள இந்து மற்றும் சீக்கிய வாக்காளர்களின் ஆதரவை பெரும் வகையில் அமித்ஷா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பஞ்சாப் முதல்வர் பக்வாந்த் மன், "பஞ்சாப் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல், நிதியை வழங்காமல் அரசியலுக்கு மட்டும் இந்த மண்ணை பயன்படுத்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications