பஞ்சாப் ஆளுநரை சந்தித்த பகவந்த்மான்.. - ஆட்சி அமைக்க உரிமை கோரிய ஆம் ஆத்மி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த பிப். 20ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் மார்ச்10ம் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தம் 117 இடங்கள் உள்ள நிலையில், ஆம் ஆத்மி 92 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.
பஞ்சாபில் காங். மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆம் ஆத்மி
டெல்லிக்கு வெளியே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். பஞ்சாப் தேர்தலில் இரண்டாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பகவந்த் மான்
பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றதும், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வரும் மார்ச் 16ஆம் தேதி, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த கிராமமான கத்ஹர் கலனில் பதவியேற்பு விழா நடைபெறும் எனக் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாடல் என்று சொல்லப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி தான் பஞ்சாபில் வெற்றி தேடி கொடுத்ததால், அதே மாதிரி ஒரு ஆட்சியை பஞ்சாபில் கொடுக்க திட்டமிட்டுள்ளார் பகவந்த் மான்.

ஆளுநர்
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பகவந்த் மான் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். அப்போது பஞ்சாப் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ளதால், ஆட்சி அமைக்க உரிமைகோரினார்.

அமைச்சர்கள்
இதற்கு முன்னதாக வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களிடம் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து 17 கேபினட் அமைச்சர்கள் தான் பொறுப்பேற்க முடியும் என்றும், மற்றவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். தலைநகரில் இல்லாமல், தொகுதியில் பணியாற்ற வேண்டும் என பல உத்தரவுகளை கூறியுள்ளார் பகவந்த் மான்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications