ரூ.5 கோடி பணம் + ஒன்றரை கிலோ தங்கம்.. தோண்ட தோண்ட கிடைத்த புதையல்.. வசமாக சிக்கிய பஞ்சாப் டிஐஜி
சண்டிகர்:பஞ்சாப்பில் டிஜஐஜியாக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக ரூ.5 கோடி ரொக்கப்பணம், ஒன்றரை கிலோ தங்க நகைகள், விலையுர்ந்த வாட்சுகள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சாப்பில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ஹர்சரண் சிங் புல்லார். இவர் 2009ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவரது தந்தை பெயர் மேஹல் சிங் புல்லார். இவர் பஞ்சாப்பின் முன்னாள் டிஜிபி ஆவார்.

இந்நிலையில் தான் டிஐஜி ஹர்சரண் சிங் புல்லார் தொழிலதிபர்களிடம் இருந்து இடைத்தரகர் கிருஷ்ணா என்பவர் மூலமாக லஞ்சமாக லட்சக்கணக்கில் வாங்கி வந்துள்ளார். இதுபற்றி சிபிஐ வசம் புகார் சென்றது.
இந்நிலையில் தான் பஞ்சாப்பின் பதேஹார்க் சாஹிப் பகுதியில் பழைய இரும்பு டீலர் ஆகாஷ் பட்டா என்பவர் சிபிஐ-யிடம் புகார் செய்தார். டிஐஜி ஹர்சரண் தன்னிடம் லஞ்சம் கேட்கிறார். பிரச்சனையின்றி தொழில் செய்ய வேண்டும் என்றால் லஞ்சம் தர வேண்டும். மாதந்தோறும் இந்த பணத்தை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கூறி மிரட்டுவதாக கூறினார்.
இதையடுத்து ஆகாஷ் பட்டா ரூ.8 லட்சத்தை ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரணுக்கு வழங்கினார். ஹர்சரண் சார்பில் இடைத்தரகர் கிருஷ்ணா ரூ.8 லட்சத்தை வாங்கினார். அப்போது சிபிஐ அதிகாரிகள் கிருஷ்ணாவை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் டிஐஜி ஹர்சரணின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதன்பிறகு போனில் ஆகாஷ் பட்டா, டிஐஜி ஹர்சரணிடம் பேசி பணம் கொடுத்ததை கூறினார்.
அப்போது டிஐஜி ஹர்சரண் லஞ்சம் வாங்கியதை சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்து அவரையும் கைது செய்தனர். இதையடுத்து சிபிஐ சார்பில் டிஐஜி ஹர்சரணின் வீடு, அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. ரூ.5 கோடி ரொக்கம், ஒன்றரை கிலோ தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், மெர்சிடஸ் மற்றும் ஆடி கார்கள், 22 உயர்ரக கைக்கடிகாரங்கள், லாக்கர் சாவிகள், இறக்குமதி செய்யப்பட்ட 40 லிட்டர் மதுபானம், துப்பாக்கிகள், தோட்டாகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இடைத்தரகர் கிருஷ்ணாவின் வீட்டில் இருந்து ரூ.21 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. தற்போது இவர் ரோபார் ரேஞ்ச் டிஐஜியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அவர் இந்த பொறுப்பை வகித்து வருகிறார். அதற்கு முன்பு பட்டியாலா ரேஞ்ச் டிஐஜியாக பணியாற்றி வருகிறார்.
அதற்கு முன்பு லஞ்ச ஒழிப்பு பிரிவின் இணை இயக்குநர், மொகாலி, கண்ணா, சங்க்ரூர், ஹாசியாபூர், பதேகார் சாஹிப் மற்றும் குர்தாஸ்பூரில் சீனியர் சூப்பிரண்ட்டாக பணியாற்றி உள்ளார். சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் பிகாராம் சிங் மஜிதியா மீதான போதைப்பொருள் கடத்தல் வழக்கை ஹர்சரண் சிங் புல்லார் தலைமையிலான எஸ்ஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications