தீபாவளிக்கு ‛சோன் பப்டி' கொடுத்த நிறுவனம்.. ஊழியர்கள் செய்த செயலை பாருங்க.. ஆடிப்போன ஓணர்
சண்டிகர்: தீபாவளிக்கு போனஸ் கேட்ட ஊழியர்களுக்கு ‛சோன் பப்டி' மட்டுமே கொடுத்த தொழிற்சாலை பெரும் பிரச்சனையை எதிர்கொண்டது. போனஸ் கிடைக்காத ஆத்திரத்தில் ஊழியர்கள் செய்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தீபாவளி பண்டிகை தமிழகத்தில் கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. அதேபோல் பல மாநிலங்களில் 21, 22ம் தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

பொதுவாக தீபாவளி.. என்றாலே கூலி வேலை செய்வோர் முதல் மாத சம்பளம் பெறுவோர் அவரை அனைவருக்கும் நினைவுக்கு வருவது போனஸ் தான். பெரும்பாலான நிறுவனங்கள் போனஸ் வழங்குகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் போனஸ் வழங்குவது கிடையாது. ஸ்வீட்ஸ் பாக்ஸ் உள்ளிட்டவை தான் வழங்கப்படுகிறது. அதுவும் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும்.
இதனால் தான் தீபாவளி சமயங்களில் ‛சோன் பப்டி' தொடர்பான மீம்கள் இணையதளங்களை ஆக்கிரமிக்கும். எங்களுக்கு தீபாவளி போனஸ் தரவில்லை. சோன் பப்டி தான் தந்தார்கள் எனவும், எங்களுக்கு சோன் பப்டி கூட தரவில்லை எனவும் பலரும் இணையதளங்களில் தெரிவிப்பதை நாம் பார்த்து இருப்போம். இந்நிலையில் தான் தீபாவளி பரிசாக போனசுக்கு பதில்‛சோன் பப்டி' பாக்ஸை ஊழியர்களுக்கு தனியார் தொழிற்சாலை ஒன்று வழங்கி உள்ளது.
இதில் கோபமான ஊழியர்கள் ‛சோன் பப்டி' பாக்ஸை தொழிற்சாலையின் வாசலில் வீசி எறிந்து எதிர்ப்பை காட்டி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே உள்ள கானார் பகுதியில் நடந்துள்ளது. ஊழியர்கள் போனஸ் கேட்டுள்ளனர்.
Diwali Kalesh
— Woke Eminent (@WokePandemic) October 21, 2025
A company gave its employees the famous most hated alleged Mithai called Soan Papdi
The employees threw the Soan Papdi boxes at the gate of the company.
Soan Papdi deserves this insult :)
What is your opinion on alleged mithai called soan papdi? pic.twitter.com/HSRPDC322r
ஆனால் தொழிற்சாலை நிர்வாகம் போனஸ் வழங்க மறுத்துள்ளது. மாறாக அனைத்து ஊழியர்களுக்கு ‛சோன் பப்டி' பாக்ஸை வழங்கி உள்ளது. இதனால் கொந்தளித்த ஊழியர்கள் தொழிற்சாலையை விட்டு வெளியே வந்து ‛சோன் பப்டி' பாக்ஸை அதன் வாசலில் வீசி எறிந்துள்ளனர்.
இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. அதேபோல் இன்னொருவரும், ‛‛சோன் பப்டி கொடுத்து தீபாவளி போனஸ் வழங்காமல் இருக்கும் நிறுவனத்துக்கு உரிய பாடத்தை ஊழியர்கள் புகட்டி உள்ளனர்'' என பணியாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர். ஒருவர், ‛‛நன்றியற்ற ஊழியர்கள்... எனது நிறுவனம் நஷ்டமடைந்தபோது நானும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டு இருக்கிறேன்'' என்று கூறி பணியாளர்களை விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல், இன்னொருவருர், ‛‛போனஸ் என்பது கம்பெனியின் விருப்பம். அதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற ரூல்ஸ் இல்லை. ஊழியர்களுக்கு நிறுவனங்களில் சம்பளம், புரோமோஷன், அலோவன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது இத்தகைய செயல் ஏற்கத்தக்கது அல்லது. ஸ்வீட் என்பது ஸ்வீட் தான்'' என கூறியுள்ளார். இதுபோல் பலரும் கருத்துகளை தெரிவித்து வருவதால் தற்போது இந்த வீடியோ பேசும் பொருளாகி உள்ளது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications