மாணவிகள் தான் டார்க்கெட்! 50 பேருக்கு தொடர் பாலியல் தொல்லை.. அரசு பள்ளி முதல்வரின் கொடூரம் -ஷாக்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் அரசு பள்ளி முதல்வர் ஒருவர் 50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்நிலையில் தான் அந்த பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி முதல்வர் 56 வயது நபர் உள்ளார். இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பள்ளி முதல்வர் மீதான புகார் தான் தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. இவர் மீது பிரதமர் மோடி அலுவலகம், தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையத்துக்கு பரபரப்பான புகார்கள் சென்றுள்ளனர்.
அதாவது பள்ளி முதல்வர், மாணவிகளை தனது அறைக்கு அழைத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மேலும் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் செய்முறை தேர்வில் தோல்வியடைய வைத்து விடுவதாக கூறி மிரட்டி தொல்லை கொடுத்துள்ளார். அதோடு சம்பவம் குறித்து வெளியே கூறினாலும் பெயிலாக்கி விடுவதாக அச்சுறுத்தி உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பயந்துபோய் சம்பவம் குறித்து வெளியில் கூறாமல் இருந்துள்ளனர். இதனை அந்த முதல்வர் சாதகமாக்கி கொண்டுள்ளார். அதோடு தொடர்ந்து பிற மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதையடுத்து மாநிலம் மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து தான் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடைியே சம்பவம் குறித்த அறிந்த பள்ளி முதல்வர் தலைவரானார். அதோடு போலீஸ் விசாரணையில் பள்ளி முதல்வர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதனால் அவர் மீது கைதான முதல்வர் மீது இந்திய தண்டனை சட்டம் 354-ஏ (பாலியல் தொல்லை), போக்சோ உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில் அதிரடியாக கைது செய்தனர். இதுபற்றி துணை சூப்பிரண்டு அமித் குமார் பாட்டியா கூறியதாவது:
‛‛புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட முதல்வர் தலைமைறைவானர். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்'' என்றார்.
இதுகுறித்து ஹரியானா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேணு பாட்டியா கூறுகையில், ‛‛எங்களிடம் மொத்தம் 60 மாணவிகளிடம் இருந்து புகார் வந்தது. இதில் 50 மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 மாணவிகள் முதல்வரின் தவறான நடத்தையை நாங்கள் அறிந்திருந்தோம் என தெரிவித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications