Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கப்போவது யார்? நாளை ரிசல்ட்! வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக நடக்கும் சட்டசபை பொது தேர்தல்கள் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த சில மாதங்களில் நடந்துள்ள சட்டசபை தேர்தல்கள் என்பதால் ஹரியானா மீதும், ஜம்மு காஷ்மீர் மீதும் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகி உள்ள நிலையில், அங்கு தேர்தல் நடைபெற்றது.

haryana assembly election 2024 jammu kashmir assembly election 2024 election results 2024 2024


ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019இன் கீழ் காஷ்மீரில் ஐந்து எம்எல்ஏக்களை துணை நிலை ஆளுநர் நியமிப்பார். 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நிலையில், 63. 88 சதவீத வாக்குகள் பதிவாகின. நாளை ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஹரியானா சட்டசபை தேர்தல்: அதேபோல், கடந்த 10 வருடங்களாக ஹரியானாவில் பாஜக ஆட்சியில் இருந்துவரும் நிலையில், அங்கு சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமாா் 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இந்த மாநிலத்தில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில், 46 சட்டசபை தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். அதேபோல, ஜம்மு காஷ்மீரிலும் 90 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 46 சட்டசபை தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். 2 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது நாளை தெரிந்துவிடும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்குவது எப்போது?: ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (அக்டோபர் 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதனையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எப்படி எண்ணப்படும்?: முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் மேற்பார்வையில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தபால் வாக்குகளை செலுத்தி உள்ள நிலையில் அவை முதலில் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே ட்விஸ்ட்.. காஷ்மீரில் பாஜகவுக்கு 5 எம்எல்ஏக்கள்.. அது எப்படி தெரியுமா?


இ.வி.எம் வாக்குகள்: தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணப்படும். மின்னணு வாக்கு எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்று வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாஜக 10 ஆண்டுகளாக ஆளும் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சி அமையக்கூடும் அல்லது தொங்கு சட்டசபை அமைக்கூடும் எனவும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், தோ்தல் முடிவுகள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஹரியானா எக்சிட் போல் முடிவுகள்: ஹரியானாவில் ஆக்சிஸ் - மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 53 - 65 இடங்களும், பாஜகவுக்கு 18 - 28 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4 - 13 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டியா டுடே - சி வோட்டர் எக்ஸிட் போலில் காங்கிரஸ் கட்சிக்கு 50 - 58 இடங்களும், பாஜகவுக்கு 20 - 28 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 10 - 14 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் பாரத் - மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 62 இடங்கள், ஆளும் பாஜகவுக்கு 18 முதல் 24 இடங்கள், இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. டைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 44-54, பாஜகவுக்கு 19-29 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 49-61 இடங்கள், பாஜகவுக்கு 20-32 இடங்கள், இதர கட்சிகளுக்கு 3-5 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-35, காங்கிரஸுக்கு 51-61 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. துரூவ் ரிசர்ச் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 22-32, காங்கிரஸ் கட்சிக்கு 50-64, மற்ற கட்சிகளுக்கு 2-8 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் எக்ஸிட் போல் முடிவுகள்: ஜம்மு காஷ்மீரில் ஆக்சிஸ் - மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 24 - 34, காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 35 - 45 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இண்டியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-32, காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 40-48 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 20-25, காங்கிரஸ் கூட்டணிக்கு 35-40, மக்கள் ஜனநாயக கட்சிக்கு 4-7, இதர கட்சிகளுக்கு 12-18 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 23-27 இடங்கள், காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 46-50 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+