போராடும் விவசாயிகளை.. அடித்து மண்டையை உடைக்க உத்தரவிட்ட அதிகாரி டிரான்ஸ்ஃபர்.. ஹரியானா அரசு உத்தரவு
சண்டிகர்: வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அடித்து மண்டையை உடையுங்கள் என போலீசாரிடம் துணை நிலை மாஜிஸ்திரேட் கூறும் வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரி டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிராகவும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹரியானாவின் கட்டாரியா கர்னல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாரியா வந்திருந்தார். அப்போது அங்கு முதல்வருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

போராடும் விவசாயிகளைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயமடைந்தனர்
இந்நிலையில், போலீசார் தடியடி நடத்துவதற்கு முன் துணை நிலை மாஜிஸ்திரேட் போலீசாரிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், கர்னல் துணை நிலை மாஜிஸ்திரேட் ஆயுஷ் சின்ஹா, "உங்களுக்கான வேலை மிகவும் எளிமையானது மற்றும் தெளிவானது.
I hope this video is edited and the DM did not say this… Otherwise, this is unacceptable in democratic India to do to our own citizens. pic.twitter.com/rWRFSD2FRH
— Varun Gandhi (@varungandhi80) August 28, 2021
அவர்கள் (போராடும் விவசாயிகள்) யாராக இருந்தாலும், இங்கே வர விடக்கூடாது. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலுவாக அவர்களை அடியுங்கள். இதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்" எனக் கூறுகிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
இந்நிலையில் 2019 பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான ஆயுஷ் சின்ஹாவை டிரான்ஸ்ஃபர் செய்து ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. இப்போது ஹரியானா மாநிலத்தின் குடிமக்கள் தகவல் துறையின் கூடுதல் செயலாளராக ஆயுஷ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து மொத்தம் 19 ஐஏஎஸ் அதிகாரிகளை ஹரியான அரசு டிரான்ஸ்ஃபர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications