காரணமே வேற.. உளவுத்துறை எச்சரித்தும் போலீஸை குவிக்காத அரசு! ஹரியானா கலவரத்தின் பகீர் பின்னணி
சண்டிகர்: ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் யாத்திரையின்போது ஏற்பட்ட வன்முறைக்கு முக்கிய காரணம், உளவுத்துறை தகவலும், போலீஸ் பாதுகாப்பு குறைவும், பசு பாதுகாவலர்கள் மீதான கோபம் என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கிறது.
ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய யாத்திரையின்போது அம்மாநிலத்தில் ஏற்பட்ட மதக்கலவரமும் அப்போது அரங்கேற்றப்பட்ட குற்ற செயல்களும் நாட்டையே உலுக்கி இருக்கின்றன. ஹரியானாவின் நுஹ் பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட வன்முறை குருகிராம் பகுதிக்கும் பரவியது. இதில் மசூதி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டு அதில் இருந்த இமாம் 80 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டு இருக்கிறார்.

இவரோடு சேர்த்து மொத்தம் 5 பேர் ஹரியானா மதக்கலவரத்தில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், உளவுத்துறை போதிய முன்னெச்சரிக்கைகளை வழங்காததும், பாதுகாப்புக்காக போதுமான அளவுக்கு போலீசார் குவிக்கப்பட்டாததுமே இந்த வன்முறைக்கு முக்கிய காரணம் என இந்தியா டுடே தொலைக்காட்சி நடத்திய கள ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.
நுஹ் மாவட்டத்தில் இருக்கும் உளவுத்துறை தகவல்களை திரட்டுவது சிஐடி இன்ஸ்பெக்டர் விஸ்வஜீத்தின் பொறுப்பு. இந்த வன்முறை குறித்து அவர் தெரிவிக்கையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் 130 கிமீ பிரஜ் மண்டல் யாத்திரை கடக்கும்போது பிரச்சனை ஏற்படும் என்று உளவுத்துறை எச்சரித்ததாக தெரிவித்தார்.
"இந்த யாத்திரை செல்லும்போது அப்பகுதி வசிக்கும் மக்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தோம். அவர்கள் கடந்து செல்லும்போது முழக்கங்களை எழுப்பிக்கொண்டு வாள்களை சுழற்றிக்கொண்டு செல்வார்கள் என்றும் எச்சரித்தோம். அரசாங்கத்துக்கு இந்த கடந்த ஒரு வாரம், 10 நாட்களுக்கு முன்பே இதுகுறித்து எச்சரிக்கை விடுத்திருந்தோம்." என்றார்.
பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மோனு மானேசர், பசுக்களுக்காக மனிதர்களை அடித்துக் கொன்ற வழக்கில் சிறைக்கு சென்றவர். பல்வேறு கும்பல் படுகொலைகளை சேர்ந்து வீடியோ எடுத்து வெளியிட்டு வருபவர். தானும் இந்த யாத்திரையில் பங்கேற்க உள்ளதாக வீடியோ வெளியிட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விஷ்வ இந்து பரிஷத் அறிவுறுத்தலின் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அவர் குறித்த வதந்தி இந்த வன்முறை ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
இதுபற்றி சிஐடி விஸ்வஜீத் தெரிவிக்கையில், "மோனு மானேசர் வருவதாக பரவிய வதந்தியால் யாத்திரையை நிறுத்த ஊர் மக்கள் முடிவு செய்தார்கள். அவர்கள் வரும் வழியை அடைக்க முயன்றார்கள். இந்த சூழலை தங்களால் கையாள முடியும் என மூத்த அதிகாரிகள் நினைத்தார்கள். இதை சாதாரணமாக நினைத்துக்கொண்டார்கள். ஊர் மக்களை சமாதானம் செய்துவிடலாம் என்று நம்பினார்கள். ஆனால், ஊர் மக்களும் ஒன்று கூடிவிட்டார்கள். 17 முதல் 22 வயது வரையிலான இளைஞர்கள் யாத்திரை வரும் பாதையில் பைக்குகளில் சென்றார்கள்.
கலவரத்தின்போது பேருந்தை ஓட்டிச்சென்று வன்முறை கும்பல் நுஹ் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தின் மோதியது. சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் அவர்களுக்கு சிக்கலாக இருந்தது. பசுக்களை வெட்டுவதற்கு அரசு விதித்த கட்டுப்பாடுகளின் காரணமாக, அது தொடர்பாக போலீசார் அவர்களின் வீடுகளில் சோதனையிட்டதால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர்." என்றார்.
இதுபற்றி அப்பகுதி காவல் நிலையத்தின் எஸ்.ஹெச்.ஓ கிஷன் குமார் கூறுகையில், "எனது உயரதிகாரிகளிடம் இந்த யாத்திரையின்போது வன்முறை ஏற்படும் என்று எந்த உளவுத்துறை தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் எனது அதிகார மட்டம் வரையிலும் கூட தகவல்கள் தரவில்லை. யாத்திரை என்பது ஒரு அவசர கால நடவடிக்கை கிடையாது. முன்பே தகவல் கிடைத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்." என்றார்.
மீண்டும் ஒருமுறை இந்தியா டுடே குழுவினர் எஸ்.ஹெச்.ஓ கிஷன் குமாரிடம் பேசியபோது, "யாத்திரை செல்லும் வழியில் குவிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இருந்த அனைத்து படைகளும் பணியில் இருந்தன. இருந்ததை வைத்து யாத்திரை வரும் வழியெங்கும் படைகளை விரிவுபடுத்தி இருந்தோம். இதில் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. பிரச்சனைக்குரிய புள்ளிகள் 10ல் இருந்து 50ல் இருந்து 200 ஆக அதிகரித்தது. ஆனால், படைகள் இல்லை." என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications