ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்.. 13 தொகுதியும் நக்சல் பலம் வாய்ந்த ஏரியா.. துணை ராணுவம் குவிப்பு!
ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தலில் நக்சல் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
சண்டிகர்: ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தலில் நக்சல் தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநில முதற்கட்ட சட்டசபை தேர்தல் இன்று துவங்கியது. காலை 7 மணிக்கு இதற்கான வாக்குப்பதிவு துவங்கி நடந்து வருகிறது. ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன.முதற்கட்டமாக 13 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள 13 முக்கியமான தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. இன்று முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

இன்று நடைபெறும் தேர்தல் அதிகம் நக்சல் பிரச்சனை உள்ள பகுதிகள் ஆகும். லத்தேர், லோகர்தாகா, சட்டாரா, கும்லா, மணிகா, பங்கி, டால்டோன்காஞ்ச் ஆகிய முக்கிய மாவட்டங்களில் இன்று தேர்தல் நடக்க உள்ளது.
இந்த 13 தொகுதிகளில் 12ல் பாஜக போட்டியிடுகிறது.பாஜகவின் கூட்டணியை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் வினோத் சிங் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் 6 இடங்கள், ஜார்க்கண்ட் முக்தி மோச்சா 4 இடங்கள்,ராஷ்டிரிய ஜனதா தளம் 3 இடத்தில் போட்டியிடுகிறது.
நக்சல் பிரச்சனை காரணமாக அங்கு துணை ராணுவப்படை குவிக்கப்பட்டு இருக்கிறது. மிக அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் சில இடங்களில் ராணுவமும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி வழக்கமாக 8 மணிக்கு துவங்கும் தேர்தல் இன்று காலை 7 மணிக்கே துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 5 மணிக்கே தேர்தல் முடிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications