பஞ்சாப் பொற்கோவில், ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பகவந்த் மான், அரவிந்த் கெஜ்ரிவால்
சண்டிகர்: பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவில், ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மான், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அபாரமாக வெற்றி பெற்றது. 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி முதல்முறையாக பஞ்சாபில் ஆட்சி அமைக்கிறது.

சண்டிகரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த பகவந்த் மான் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, முதல்வர் வேட்பாளராக களமிறங்கி வெற்றிப்பெற்ற பகவந்த் மான் வரும் 16-ம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்கவுள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் அமிர்தசரஸில் இன்று வெற்றிப் பேரணி நடத்த உள்ளனர்.
இதற்காக, அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை பகவந்த் மான் வரவேற்றார்.
இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் நிர்வாகிகள் பகவந்த் மான் ஆகியோர் பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
பின்னர் பகவந்த் மான் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications