எனக்கு ‛பிரேக்அப்’ ஆகிவிட்டது.. 12 நாள் லீவு கேட்ட 2K கிட்ஸ்.. தனியார் நிறுவன சிஇஓ செய்ததை பாருங்க!
சண்டிகர்: ‛‛எனக்கு பிரேக்அப் ஆகிவிட்டது 28 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை விடுமுறை வேண்டும்'' என 2K கிட்ஸ் ஒருவர் பணியாற்றும் நிறுவனத்தின் சிஇஓவுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளார். அந்த இ-மெயிலை பார்த்த சிஇஓ அவருக்கு 12 நாட்கள் விடுமுறை வழங்கி உள்ளார். மேலும் இந்த பதிவை சிஇஓ தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ‛மிகவும் நேர்மையான விடுப்பு விண்ணப்பம்' என புகழ்ந்து இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஹரியானாவின் குர்கிராமை அடிப்படையாக கொண்டு ‛நாட் டேட்டிங்'(Knot Dating) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் என்பது திருமணம் தகவல் சேவையை வழங்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், சிஇஓவாகவும் இருப்பவர் ஜஸ்வீர் சிங்.

இந்நிலையில் தான் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2K கிட்ஸ் ஒருவர், ஜஸ்வீர் சிங்கிடம் 12 நாட்கள் விடுமுறை கேட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு அவர் கூறிய காரணம் தான் பேசும் பொருளாகி உள்ளது.

இதுதொடர்பாக அந்த ஊழியர், ஜஸ்வீர் சிங்கிற்கு அனுப்பிய மெயிலில், ‛‛ஹலோ சார்.. சமீபத்தில் எனக்கு ‛பிரேக்அப்' நடந்தது. இதனால் வேலையில் முழு கவனத்தை செலுத்த முடியவில்லை. எனக்கு சிறிது காலம் பிரேக் தேவைப்படுகிறது. இன்று நான் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறேன். எனவே எனக்கு அக்டோபர் 28 முதல் செப்டம்பர் 8 ம் தேதி வரை விடுமுறை வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த நிறுவனத்தின் சிஇஓ ஜஸ்வீர் சிங் ‛ஓகே' சொல்லி உள்ளார். தற்போது அந்த ஊழியர் 12 நாள் விடுப்பில் சென்றுள்ளார். இந்நிலையில் தான் ஊழியர் அனுப்பிய இ-மெயிலின் ஸ்கீரின்ஷாட்டை ஜஸ்வீர் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‛மிகவும் நேர்மையான விடுமுறை விண்ணப்பம் இதுதான். ‛ஜென் இசட்' தலைமுறையினர் வெளிப்படையானவர்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார்.

ஜென் இசட்' தலைமுறையினர் என்பது கடந்த 1997 ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுக்குள் பிறந்தவர்களை குறிக்கும். இவர்களை 2K கிட்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றனர். தற்போது இந்த பதிவு இணையதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
இதனை பார்த்த பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் சிலர், ‛‛நேர்மையாக லீவு கேட்டது இருக்கட்டும். நீங்கள் லீவு கொடுத்தீர்களா?'' என்று கேட்டனர். அதற்கு ஜஸ்வீர் சிங், ‛‛ஆம், விடுமுறை உடனடியாக அனுமதிக்கப்பட்டது'' என்று கூறினார். இதையடுத்து இந்த பதிவுக்கு கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.
பொதுவாக விடுமுறை கேட்கும்போது ஊழியர்கள் பொய்யான தகவல்களை கூறுவது உண்டு. உடல்நலம் சரியில்லை என்று நம்மில் பலரும் கூட விடுமுறை எடுத்து இருப்போம். இதற்கு முக்கிய காரணம் நிறுவனத்தின் உயரதிகாரிகள் வேறு காரணங்களை சொன்னால் விடுமுறை வழங்க மறுப்பது தான்.
இப்படியான சூழலில் ஊழியர் நேர்மையாக தனக்குரிய உண்மை காரணத்தை கூறி விடுமுறை கேட்டுள்ளார். அதையும் நிறுவனத்தின் சிஇஓ பெருந்தன்மையாக ஏற்று விடுமுறைக்கு ஓகே சொல்லி உள்ளார். இதனால் பலரும் விடுமுறை கேட்ட ஊழியர் மற்றும் நிறுவனத்தின் சிஇஓ ஜஸ்வீர் சிங் ஆகியோரை பாராட்டி வருகின்றனர். இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications