'உங்களுக்கு ஒரு நாள் தான் டைம்.. பிரியங்காவை விடுதலை செய்யாவிட்டால்..' எச்சரிக்கும் நவ்ஜோத் சித்து
சண்டிகர்: சோனியா காந்தி கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நவ்ஜோத் சிங் சித்து, பிரியங்கா காந்தியை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி விடுதலை செய்யப் படாவிட்டால் லக்கிம்பூர் கெரியை நோக்கி பேரணி நடத்தப்படும் என நவ்ஜோத் சிங் சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, லக்கிம்பூர் கெரி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டிருந்தார்.

சோனியா காந்தி
உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்துக்குத் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தார். துணை முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜகவினர் சென்ற வாகனங்கள் போராட்டம் நடைபெற்ற இடம் வழியாகச் சென்றபோது, வாகனங்களை நோக்கி கல்வீச்சு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

திடீர் வன்முறை
அந்த சம்பவம் நடைபெற்றபோது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருக்கின்றனர். அப்போது, அவர்களுக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர். இதையடுத்து, விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. துணை முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர்.

விடுதலை செய்ய வேண்டும்
வாகனம் கூட்டத்திற்குள் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள சித்து, "விவசாயிகளின் படுகொலைக்குக் காரணமான மத்திய அமைச்சரின் மகனை நாளைக்குள் கைது செய்யவில்லை. விவசாயிகளுக்காகப் போராடும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நாளைக்குள் விடுதலை செய்யப்படவில்லை எனில், பஞ்சாப் காங்கிரஸ் சார்பாக லக்கிம்பூா் நோக்கி பேரணி நடத்தப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கைது இல்லை
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரைச் சந்திக்கச் சென்ற தன்னை திங்கட்கிழமை சட்ட விரோதமாகக் கைது செய்துள்ளதாகப் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்கிம்பூர் மாவட்டத்தில் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிய நிலையில் இது வன்முறையாக வெடித்தது. இந்த சம்பவம் கொலையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், முதல் தகவல் அறிக்கையில் ஆஷிஷின் பெயர் சேர்க்கப்பட்டு 24 மணி நேரம் ஆன பின்பும் அவர் கைது செய்யப்படவில்லை.

விவசாயிகள் கைது
இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. ஆனால், சம்பவம் நடைபெற்ற போது, அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தானும் தனது மகனும் இல்லை என மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், காரை ஓட்டியது மத்திய அமைச்சரின் மகன் தான் என்றும் இது தொடர்பான வீடியோவை பார்த்தால் உண்மை புரியும் என்றும் காயமடைந்த விவசாயிகள் கூறி வருகின்றனர். மேலும், அமைச்சரின் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications