Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

48 மணிநேரம் தான் டைம்.. பாகிஸ்தானுக்கு எதிராக மெகாபிளான்! பஞ்சாப் விவசாயிகளுக்கு BSF அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. இதற்கான சரியான நேரத்துக்காக நம் நாடு காத்திருக்கிறது. இதனால் இருநாடுகள் இடையே மோதல் என்பது வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பஞ்சாப்பில் பாகிஸ்தானையொட்டி விவசாயிகளுக்கு எல்லை பாதுகாப்பு படையினர் 48 மணிநேரம் காலக்கெடு வழங்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு என்பது பாகிஸ்தானுக்கு எதிராக பெரிய தாக்குதலை இந்தியா முன்னெடுக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் அருகே பைசரன் என்ற புல்மேடு உள்ளது. இங்கு கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிசூடு நடத்தினர். 22 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதில் 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' மேற்கொண்டுள்ளது.

pahalgam-attack-clear-fields-along-border-in-next-48-hours-bsf-ordered-to-punjab-farmers

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடும் தயாராகி வருகிறது. விரைவில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நம் நாட்டின் படை வீரர்கள் தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அரபிக்கடலில் நம் நாட்டின் போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுவாக ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும்போது அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகளின் பதில் தாக்குதலில் நம் நாட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் தற்போது எல்லையோர மக்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவை எடுத்து கொண்டால் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பாகிஸ்தானுடன் எல்லைகளை பகிர்ந்து வருகின்றன.

இதில் ஜம்மு காஷ்மீர் மக்கள் நேற்று முதலே பதுங்கு குழிகள் தோண்டி, கோதுமை உள்ளிட்ட பயிர்களை அவசர அவசரமாக அறுவடை செய்ய தொடங்கி விட்டனர். இது பாகிஸ்தானுடனான மோதல் வலுவாக இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து வரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு நம் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதோடு 48 மணிநேர காலக்கெடுவுக்குள் அதனை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அதாவது பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் பஞ்சாப் விவசாயிகள் கோதுமை விவசாயம் செய்துள்ளனர். இந்த கோதுமையை அடுத்த 48 மணிநேரத்துக்குள் அறுவடை செய்ய வேண்டும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர். இந்த உத்தரவு என்பது நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது விவசாயிகள் மும்முரமாக பஞ்சாப்பில் அறுவடை பணிகளை தொடங்கி உள்ளனர். பஞ்சாப்பை எடுத்துகொண்டால் பாகிஸ்தானுடன் சுமார் 530 கிலோமீட்டர் தூரத்துக்கு எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த எல்லையோர கிராமங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது கோதுமை பயிரிப்பட்டுள்ளது. இது அறுவடைக்கு தயாராகிவிட்டது. இப்போது பாகிஸ்தானை நாம் தாக்கினால் அவர்கள் பதிலுக்கு நம்மை தாக்குவார்கள். இதனால் எல்லையோரத்தில் விவசாயம் செய்த மக்களால் அறுவடை செய்ய முடியாமல் போகும். அதோடு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதனை தடுப்பதற்காக தான் எல்லை பாதுகாப்பு படையினர் 48 மணிநேரத்தில் அறுவடை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

அம்ரித்சார், தார்தரன், பெரோஸ்பூர், பஜில்கா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு இந்த அறிவுரை என்பது வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் எல்லையோரம் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய பாதைகள் கேட் போட்டு அடைக்கப்பட உள்ளது. மேலும் மோதல் அதிகரிக்கப்படும் பட்சத்தில் விவசாய நிலங்களுக்கு தற்காலிகமாக செல்ல தடை விதிக்கப்படும் என்றும் எல்லை பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி எல்லையோர கிராமமான பங்களாவில் வசித்து வரும் ரக்பீர் சிங் கூறுகையில், ‛‛விவசாய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று எல்லை பாதுகாப்பு படையினர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும் எல்லையில் பதற்றமான இடங்களில் விவசாய நிலத்துக்கு செல்வது தடுக்கப்படும் என்று கூறினர். கால்நடைகளுக்கு தேவையான தீவனம் என்பது வேண்டும்.இதனால் எங்களை விவசாய பணிகள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

இதுபற்றி இன்னொரு எல்லையோர கிராமத்தை சேர்ந்த விவசாயி சுர்ஜித் சிங்பூரா கூறுகையில், ‛‛அறுவடை பணிக்கு அதிகமான மெஷின்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு இந்த வார்னிங் பிஎஸ்எப் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் பயந்து விரைவாக அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறோம்'' என்றார்.

அதேபோல் பெராஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜாராய் என்ற கிராமத்தை சேர்ந்த லக்விந்தர் சிங் கூறுகையில், ‛‛ 80 சதவீத கோதுமை அறுவடை பணிகள் முடிவடைந்துவிட்டது. இருப்பினும் வைக்கோல் சேகரிக்க முடியாத நிலை உள்ளது'' என்று கவலை தெரிவித்தார். இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையினர் கூறுகையில், ‛‛விவசாயிகளின் சிரமங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாட்டின் பாதுகாப்பும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் முதன்மையானது. இதனால் தான் அறுவடை பணிகளை சீக்கிரமாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மட்டுமின்றி பஞ்சாப் வழியாகவும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் - இந்தியா மோதல் வந்தால் அது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எதிரொலிக்கும். இதனால் அங்குள்ள மக்களை முன்கூட்டியே தயார் படுத்தும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+