தமிழ்நாடு வழியில் பஞ்சாப்- பல்கலைக் கழக வேந்தராக இனி முதல்வர்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
சண்டிகர்: பஞ்சாப் மாநில பல்கலைக் கழகங்களில் ஆளுநருக்கு பதில் இனி மாநில முதல்வர் வேந்தராக பதவி வகிக்க வகை செய்யும் மசோதா அம்மாநில சட்டசபையில் நேற்று ஒருமனதாக நிறைவேறியது. மேலும் பஞ்சாப் மாநிலத்துக்கான நிதியை மத்திய பாஜக அரசு ஒதுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆளுநர்களே, மாநிலங்களின் பல்கலைக் கழகங்களின் வேந்தர்களாக பதவி வகிக்கின்றனர். இதனை பயன்படுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையான ஒரு நிழல் அரசாங்கத்தை ஆளுநர்கள் நடத்த முனைகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இந்த விவகாரம் பல ஆண்டுகளாக பேசு பொருளாக இருக்கிறது.

இதனையடுத்து அண்மையில் மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், ஆளுநர்களுக்கு பதில் இனி வேந்தர்களாக மாநில முதல்வர்கள் பதவி வகிப்பர் என சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இதே போக்கை கையாண்டு வருவது சர்ச்சையாக நீடிக்கிறது. இதனால் தமிழ்நாடு சட்டசபையிலும் இதே போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் மாநில சட்டசபையிலும், பல்கலைக் கழக வேந்தராக இனி மாநில முதல்வர் பதவி வகிக்க வகை செய்யும் சட்டசம் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் பஞ்சாப் மாநிலத்துக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதை சுட்டிக்காட்டியும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மத்திய அரசு பஞ்சாப் மாநில அரசுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து வழங்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications