ஐயய்யோ அவரா.. அவரு பயங்கரமான ஆளாச்சே.. அம்மாவுக்கு சோறு கூட தராதவர்.. சித்து மீது சகோதரி பரபர புகார்
சண்டிகர்: பெற்ற தாயை கைவிட்டு, அனாதையாக தாய் இறக்க காரணமாக இருந்த பஞ்சாப் காங்கிரஸின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மீது புகார் தெரிவித்துள்ளார் அவரது சகோதரி.
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர தேர்தல் வேலைகளை செய்துவருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் சகோதரி சுமன் துர், அவர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சுமன் துர்
நவ்ஜோத் சிங் சித்துவின் மூத்த சகோதரி சுமன் துர். இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சுமன் துர் தற்போது பஞ்சாப் மாநிலம் சண்டிகர் வந்துள்ளார். இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பையும் நடத்தினார். அப்போது, ''1986 -ம் ஆண்டு தந்தையின் மரணத்திற்குப் பிறகு, வயதான தாயை நவ்ஜோத் சிங் கைவிட்டார். அதன்பிறகு 1989-ம் ஆண்டு டெல்லி ரயில் நிலையத்தில் ஆதரவற்ற பெண்ணாக இறந்துபோனார்.

கொடூரமானவர்
அப்பாவின் சொத்து மற்றும் பென்ஷன் எதையும் எங்களுக்கு கொடுக்கவில்லை. நவ்ஜோத் சிங் மிகவும் கொடூரமானவர். பணத்துக்காக என்னுடைய அம்மாவை கொன்றுவிட்டார்'' என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை தெரிவித்தார். மேலும், சுமன் துர் கூறுகையில், ''நாங்கள் மிகவும் கடினமான காலங்களை பார்த்திருக்கிறோம். என் அம்மா நான்கு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். நான் எதைக் கூறினாலும் அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

ஆதாரம்
என்னுடைய தாய் தந்தையைப் பிரிந்துவிட்டதாகக் கூறுகிறார். அதற்கான ஆதாரத்தைக் கேட்கிறேன்'' என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சுமன் துர் கடந்த ஜனவரி 20ம் தேதி, நவ்ஜோத் சித்துவைச் சந்திக்கச் சென்றதாகவும் ஆனால் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் சுமன் தெரிவித்துள்ளார். நவ்ஜோத்தை சந்திக்கவே பஞ்சாப் வந்ததாக அழுதுகொண்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

நீதி வேண்டும்
இந்நிலையில், "நவ்ஜோத் சிங் சித்துவைத் தொடர்புகொள்ளும் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, நான் செய்தியாளர் சந்திப்பில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் என்னை போனில் பிளாக் செய்துவிட்டார். அவருடைய வேலைக்காரர்களும் கதவுகளைத் திறப்பதில்லை. என் அம்மாவுக்கு நீதி வேண்டும்.
எனக்கு 70 வயது, எங்கள் குடும்பத்தைப் பற்றிய இந்த விஷயங்களை பொதுவெளியில் சொல்வது மிகவும் கடினமானது" என்று சுமன் துர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications