8 வருட பிளான்! இந்திய அரசியலில் முக்கிய நாள்! பஞ்சாப் வெற்றியால் பெரும் தேசிய தலைவராகும் கெஜ்ரிவால்!
சண்டிகர்: பஞ்சாப்பில் வெற்றிபெறுவதன் மூலம் ஆம் ஆத்மி கட்சி தேசிய அளவில் முக்கியமான கட்சியாக உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இமாச்சல பிரதேசம், குஜராத்திலும் கவனம் செலுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி தற்போது டெல்லிக்கு வெளியே முதல்முறை மாபெரும் வெற்றியை நோக்கி சென்று இருக்கிறது.
Recommended Video
பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. பஞ்சாப்பை பொறுத்தவரை அங்கு சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20ம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ், பாஜக, சிரோன்மணி அகாலிதளம், பாஜக இடையே கடும் போட்டி இங்கு நிலவி வந்தது.
நீக்கப்பட்ட 3 விவசாய சட்டங்கள், விவசாய போராட்டம், பிரதமர் மோடியின் கான்வாய் மறிப்பு போன்ற விவகாரங்கள் இந்த தேர்தலில் அதிக கவனம் பெற்றன. பஞ்சாப்பில் 117 இடங்கள் உள்ள நிலையில் அங்கு பெரும்பான்மை பெற 59 இடங்களில் வெல்ல வேண்டும்.

முன்னணி நிலவரம்
இதுவரை வெளியான நிலவரங்களின்படி பஞ்சாப்பில் 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இது வெற்றிக்கு தேவையான 59 இடங்களை விட அதிகம். அங்கு காங்கிரஸ் 18 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சிரோன்மணி அகாலிதளம் 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் பின்னடைவு
அங்கு காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்த அம்ரிந்தர் சிங், கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சரன்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் முதல்வராக்கியது. இந்த நிலையில் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து காங்கிரஸ் இந்த தேர்தலை எதிர்கொண்டது. ஏகப்பட்ட உட்கட்சி மோதல், நிர்வாகிகள் இடையே கோஷ்டி மோதல் என்று பல விஷயங்கள் காங்கிரசுக்கு எதிராக திரும்பி உள்ளது.

ஆம் ஆத்மி எழுச்சி
ஆம் ஆத்மி சார்பாக பகவத் சிங் மன் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தற்போது அவர் ஆம் ஆத்மி கட்சிக்கு மாபெரும் வெற்றியை அளிக்கும் நிலையில் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் பஞ்சாப்பில் தீவிரமாக நடந்த நிலையில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளில் கிட்டத்தட்ட கிளீன் ஸ்வீப் செய்யும் அளவிற்கு மாபெரும் வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி சென்று கொண்டு இருக்கிறது.

ஆம் ஆத்மி 8 வருடம்
பஞ்சாப்பில் கடந்த 8 வருடமாக ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தது. 2014லேயே இங்கு ஆம் ஆத்மி கட்சி கால் பதித்துவிட்டது. லோக்சபா தேர்தலில் இங்கு 4 இடங்களில் ஆம் ஆத்மி வென்று அசத்தியது. அப்போது டெல்லியில் கூட லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெறவில்லை. அதன்பின் 2017 சட்டசபை தேர்தலில் 20 இடங்களில் ஆம் ஆத்மி வென்றது. அந்த தேர்தலில் 25 இடங்களில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

பஞ்சாப்
அதே பஞ்சாப்பில் கடந்த 8 வருடமாக கடுமையாக உழைத்து தற்போது ஆம் ஆத்மி கட்சி அளவும் கட்சியாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் அறிகுறிகள் தெரிகின்றன. தற்போது கோவாவில் 1 இடத்திலும் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. இதுபோக உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்திலும் ஆம் ஆத்மி வேகமாக கால் பதித்து வருகிறது.

தேசிய கட்சி
இதனால் தேசிய கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப்பில் வென்றதன் மூலம் டெல்லிக்கு வெளியே முதல்முறை ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுகிறது. இதன் மூலம் அந்த கட்சிக்கு ராஜ்ய சபா இடங்களும் கிடைக்கும் (கிட்டத்தட்ட 8 இடங்கள்) இதனால் தேசிய அளவில் காங்கிரசின் இடத்தை ஆம் ஆத்மி பிடிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய அளவில் மாபெரும் அரசியல் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுக்கும் அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications