பஞ்சாப் தேர்தல் அவர் தீவிரவாதிகள் வீட்டில்தான் இருப்பார்..அரவிந்த் கெஜ்ரிவாலை விளாசிய ராகுல்காந்தி
சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதிகளைப் வீட்டில் காணலாம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி கூறியிருப்பது பஞ்சாப் அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பாஜக - சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்து கேப்டன் அம்ரீந்தர்சிங்கின் லோக் பஞ்சப் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களம் கண்டன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது செவ்வாய்க்கிழமை கடுமையான தாக்குதலைத் தொடங்கினார்.

ராகுல்காந்தி தாக்கு
என்ன நடந்தாலும், காங்கிரஸின் தலைவரை ஒரு பயங்கரவாதியின் வீட்டில் பார்க்கவே முடியாது, ஆணால் ஜாதுவின் (ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னமான விளக்குமாறு) மிகப் பெரிய தலைவரை பயங்கரவாதியின் வீட்டில் காணலாம். அதுதான் உண்மை என்று பர்னாலாவில் நடந்த பேரணியில் ராகுல்காந்தி கூறினார். 2017 தேர்தலின் போது பஞ்சாபின் மோகாவில் உள்ள முன்னாள் காலிஸ்தானி பயங்கரவாதியின் வீட்டில் ஒரே இரவில் கெஜ்ரிவாலுக்கு தங்கியிருந்ததற்கு ராகுல் காந்தி இப்படி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் எரிந்து விடும்
அரசாங்கத்தை அமைக்க "ஒரு வாய்ப்பு" தேடுபவர்கள் பஞ்சாபை "அழிப்பார்கள்" மற்றும் மாநிலம் "எரிந்துவிடும்" என்ற ராகுல், "பஞ்சாப் ஒரு எல்லை மற்றும் உணர்திறன் மாநிலம், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பஞ்சாபை புரிந்துகொண்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும்.. அமைதி இல்லாமல் போனால் எதுவும் மிச்சம் இருக்காது என்றும் ராகுல்காந்தி கூறினார். "ஏக் பார் மௌகா தோ' என்று உங்களுக்கு வாக்குறுதி அளிப்பவர்கள், பஞ்சாபை அழித்து விடுவார்கள். பஞ்சாப் எரியும், என் வார்த்தைகளை நினைவில் வையுங்கள்" என்று ஆம் ஆத்மி கட்சியை தாக்கினார்

அமரீந்தர் சிங் மீது விமர்சனம்
கடந்த ஆண்டு அதிகாரப் போட்டிக்குப் பிறகு காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியையும் தனது பிரச்சாரத்தில் ராகுல்காந்தி தாக்கிப் பேசினார். கடந்த ஆண்டு பிஜேபியுடன் களமிறங்கியதற்காக கேப்டன் சிங் கட்சியால் நீக்கப்பட்டார், 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதையும், 70-80 இடங்களில் வெற்றி பெறுவதையும் கட்சித் தொண்டர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ராகுல் கூறினார்.

முதல்வர் சரண்ஜித் சன்னி
தற்போதைய முதல்வர் சரண்ஜித் சன்னியைப் பாராட்டிய ராகுல் காந்தி, தான் மக்களை அன்புடன் சந்தித்து அரவணைப்பதாகவும், ஆனால் அமரீந்தர் சிங் அவ்வாறு செய்வதை தான் பார்த்ததில்லை என்றும் கூறினார். அமரீந்தர் சிங் ஒரு ஏழையைக் கட்டிப்பிடிப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, அவர் அவ்வாறு செய்வதை நான் பார்த்ததில்லை. மேலும் அமரீந்தர் சிங்குக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இருப்பதை நான் உணர்ந்த நாளே, அவரை காங்கிரஸ் கட்சி நீக்கியது என்றும், அமரீந்தர் சிங்கைப் போலல்லாமல், மின்சாரக் கட்டணங்களைக் குறைத்து, நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்வதன் மூலம் சாதாரண நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க சன்னி தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்தார் ராகுல்காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications