தமிழகத்தில் அமைச்சர்களுக்கு சம்பளம் எவ்வளவு? என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இவர்களது சம்பளம் என்ன இருக்கும், என்னென்ன சலுகைகள் வழங்கப்படும், முதல்வர் விஜய்க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படும், என்ன மாதிரியான பாதுகாப்பு, எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பளம் எவ்வளவு வழங்கப்படும் என்ற விவரங்களை இங்கு காணலாம்.
தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு புதுமுகங்கள் பலர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதேபோன்று 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கெடுத்துள்ளது. பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு சம்பளம் எவ்வளவு வழங்கப்படும்? இதர சலுகைகள் என்னென்ன என்ற விவரங்களை இங்கு காணலாம்.

அடிப்படை சம்பளம் ரூ.30 ஆயிரம் தான்
எம்பிக்களுக்கான சம்பளம் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தாலும் எம்.எல்.ஏக்களுக்கான ஊதியம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். 2008-ம் ஆம் ஆண்டு எம்.எல்.ஏக்களுக்கு மாத ஊதியம் வெறும் ரூ.30 ஆயிரமாக இருந்தது. ஆனால் இது படிப்படியாக உயர்ந்து 2013-ல் ரூ.55 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
பின்னர் 2017 ஆம் ஆண்டு எடப்பாடி ஆட்சி காலத்தில் எம்.எல்.ஏக்களுக்கான சம்பளம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அமைச்சர்களுக்கு என தனியாக சம்பளம் கிடையாது. எம்.எல்.ஏக்களுக்கு என்ன சம்பளம் வழங்கப்படுமோ அதே சம்பளம்தான் அமைச்சர்களுக்கும் வழங்கப்படும். இதில் அடிப்படை சம்பளமாக 30 ஆயிரமாக இருக்கும். அதாவது முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் MLA என எல்லாருக்குமே அடிப்படை ஊதியம் ரூ.30 ஆயிரம் தான்.
ரயில், விமானத்தில் டிக்கெட் இலவசம்
இதர தொகை அனைத்தும் பல்வேறு படிகளாக பிரித்து வழங்கப்படும். தொகுதி படி 25 ஆயிரம் ரூபாய், வாகன படி ரூ.25 ஆயிரம் ரூபாய், மாதாந்திர படி ரு.10 ஆயிரம் ரூபாய் என வழங்கப்படும். இது தவிர தொலைபேசி செலவு, அஞ்சல் செலவும் உள்ளிட்டவையும் வழங்கப்படும். அமைச்சர்களுக்கு கூடுதலாக வீடு மற்றும் கார் வழங்கப்படும்.
எம்.எல்.ஏவுக்கு இலவச மருத்துவ வசதி, பயணம் செய்வதற்கு விமானம், ரயில், பேருந்து டிக்கெட் இலவசமாக அளிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான ஒரு அலுவலகத்தை நிர்வகிக்கலாம். தேவைப்பட்டால் ஒரு நபரை வேலைக்கு அமர்த்தலாம். அதற்கான சம்பளமும் தனியாக வழங்கப்படும். சட்டசபை நடைபெறும் போதும் துறை சார்ந்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் போதும் தினசரி படியாக தலா ரூ.2,500 வரை தனியாக வழங்கப்படும்.
முதல்வர் விஜய்க்கு சம்பளம் எவ்வளவு?
முதல்வர் விஜய்க்கு சம்பளமாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கிடைக்கும். அதுமட்டுமின்றி விஜய்க்கு பல சலுகைகள் கிடைக்கும். குண்டு துளைக்காத 3 சொகுசு கார்கள் வழங்கப்படும். பெட்ரோல், டீசல் அலவன்ஸாக மாதம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். விஜய்க்கு தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
இந்தியாவில் விவிஐபிகளுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கும் இந்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பின் கீழ் கான்வாய் வாகனங்கள், கமேண்டோ பாதுகாப்பு, ஆயுதம் ஏந்திய காவலர்கள் பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். விஜய்யின் கன்வாயில் ஜாமர் கருவி பொருத்தப்பட்ட ஒரு வாகனமும் பயணிக்கும்.
-
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
முதல்வர் விஜய்யை சுற்றி தலைமை செயலகத்தில் 4 பவர் சென்டர்கள்.. முன்னாள் அமைச்சர் உதயக்குமார் புகார் -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
இனி யாருக்காக அரசியல் செய்யணும்.. கலக்கத்தில் சீமான்.. லைம்லைட்டை இழந்து நிற்கும் நாம் தமிழர்? -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம்












Click it and Unblock the Notifications