நாளை அமைச்சராகும் வன்னி அரசு, ஷாஜஹான்.. 2 முக்கிய துறைகளை ஒதுக்கிய முதல்வர் விஜய்?
சென்னை: விசிகவில் வன்னி அரசும், ஐயூஎம்எல்-ல் ஷாஜஹானும் அமைச்சர்களாக நாளை பதவியேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தவெக ஆட்சியை பிடித்துள்ளது. தவெக ஆட்சியை அமைப்பதற்கு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஆதரவு தெரிவித்தது. அதேபோல் விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்தன. ஆனாலும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய இரு கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஐயூஎம்எல் காதர் மொய்தீன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் ஐயூஎம்எல் தவெக அமைச்சரவையில் இணையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஐயூஎம்எல் சார்பாக பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக தமிழக அமைச்சரவையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 2ஆக உயரக்கூடும்.
அதேபோல் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான விசிக மாவட்டச் செயலாளர்கள் அதிகாரத்தில் பங்கு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கான காலம் கனிந்துவிட்ட சூழலில், திருமாவளவன் காலம் தாழ்த்த கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதையடுத்து விசிகவும் அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்கேற்ப இன்று தவெக மற்றும் காங்கிரஸ் சார்பாக இன்று 23 பேர் அமைச்சராக பொறுப்பேற்றனர். அவர்களுக்கான இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை ஆகியவை யாருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் மூலமாக வன்னி அரசுக்கு ஆதிதிராவிட நலத்துறை மற்றும் ஷாஜஹானுக்கு சிறுபான்மை நலத்துறை ஆகியவை ஒதுக்கீடு ஒதுக்கீடு செய்யப்படலாம்.
இதன் மூலமாக இந்த இரு கட்சிகளும் திமுக உடனான கூட்டணியில் இருந்து வெளியில் வந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. தவெக ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த போது, தாங்கள் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்று கூறி இருந்தனர். தற்போது கூட்டணி ஆட்சியில் பங்கெடுப்பதால், திமுக உடனான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications