பஞ்சாப்பில் சரண்ஜித் சிங்கை டிக் அடித்த காங்கிரஸ்.. டிஜிட்டல் பிரச்சாரத்தை துவங்கிய ராகுல் காந்தி!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கான காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கவுள்ளார் ராகுல் காந்தி.
Recommended Video
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
177 இடங்களை கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாப்
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் பஞ்சாப் காங்கிரஸூக்கு ஆம் ஆத்மி பலத்த போட்டியைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

முதல்வர்
இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று பஞ்சாபில் டிஜிட்டல் பிரசாரத்தை மேற்கொள்வார் என்றும் அப்போது பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதனால் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. பஞ்சாப் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியா அல்லது நவ்ஜோத் சிங் சித்துவா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் காங்கிரஸ் தொண்டர்கள்.

நவ்ஜோத் சிங் சித்து
இந்த நிலையில்தான் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் வேட்பாளர் அறிவிக்கபடுவதற்கு முன்பாக, காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது ட்விட்டரில் "முடிவெடுக்கும் செயலின்றி பெரிதாக எதுவும் சாதிக்கப்படவில்லை, பஞ்சாபிற்கு தெளிவுபடுத்த வரும் எங்கள் வழிகாட்டி ராகுல் ஜிக்கு அன்பான வரவேற்பு. அவருடைய முடிவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்" என்று காலையில் பதிவிட்டு இருந்தார்

ராகுல் காந்தி
பஞ்சாப்பில் டிஜிட்டல் பிரசாரத்தில் பங்கேற்க ராகுல் காந்தி இன்று பஞ்சாப்பில் உள்ள ஷானிவால் விமான நிலையம் வந்தடைந்தார். அதையடுத்து லூதியானாவில் இருக்கும் தனியார் ஹோட்டலில் தங்கி இருக்கும் ராகுல் காந்தி, பஞ்சாப் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பிபிசிசி முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதல்வர் வேட்பாளர்
தனியார் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், இன்று மாலை பஞ்சாப் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பஞ்சாப் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்க உள்ளார். ராகுல் காந்தியால் தற்போது மூன்று முடிவுகளை மட்டுமே எடுக்க முடியும். ஒன்று மீண்டும் சரண்ஜித் சிங்கை அறிவிப்பது, அல்லது நவ்ஜோத் சிங் அல்லது தேர்தலுக்கு முன் முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்லாமல் தேர்தலை சந்திப்பது என்ற திட்டம் மட்டுமே ராகுல் காந்தியிடம் இருக்கிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications