பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளரை இன்று அறிவிக்கிறார் ராகுல்- சவுண்டு விடும் சித்து!
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார். ஆனாலும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து தம்மையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்கிற நம்பிக்கையில் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
Recommended Video
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு வரும் 20-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.
அதேநேரத்தில் டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சி அமைப்போம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. கருத்து கணிப்புகள் பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்றே கூறுகின்றன. ஆம் ஆத்மி கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்பதும் கருத்து கணிப்புகளின் முடிவுகளாகும்.

ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்
பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பக்வந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களிடம் கருத்து கேட்டு பக்வந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது ஆம் ஆத்மி. ஆனால் காங்கிரஸ் கட்சியால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியாத அளவுக்கு உட்கட்சி மோதல் உச்சத்தில் உள்ளது.

காங். முதல்வர் வேட்பாளர்?
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி தாமே முதல்வர் வேட்பாளர் என்கிறார். ஆனால் 60 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் இருக்கும் நானே முதல்வர் வேட்பாளர் என அடம்பிடிக்கிறார் அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து. இதனால் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் மேலிடம் அறிவிக்காமல் இருந்து வருகிறது.

ராகுல் இன்று அறிவிப்பு
இதனிடையே பஞ்சாப் தேர்தலுக்காக லூதியானாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். லூதியானா பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளரை ராகுல் காந்தி அறிவிக்க உள்ளார். இது அம்மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சவுண்டு விடும் சித்து
மேலும் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்த நவ்ஜோத்சிங் சித்து, எனக்கு சுரங்கங்களோ மதுபான தொழிற்சாலைகளோ எதுவும் இல்லை. என்னுடைய பஞ்சாப் மாடல் என்பது வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. பஞ்சாப் மண்ணின் இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும். இம்மாநிலத்தின் 2 முதல்வர்கள் மாபியாக்களை வளர்த்துவிட்டிருந்தனர். இவற்றையெல்லாம் நான் முடிவுக்கு கொண்டு வருவேன் என முதல்வர் வேட்பாளர் கனவுடன் நம்பிக்கையில் பேட்டி கொடுத்து வருகிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications