சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பஞ்சாப் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்..உலக புகழ்பெற்ற காளி கோயிலில் நடந்த ஷாக் சம்பவம்! பரபர வீடியோ

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பாட்டியாலாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காளி கோவிலில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    பஞ்சாப் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்..உலக புகழ்பெற்ற காளி கோயிலில் நடந்த ஷாக் சம்பவம்! பரபர வீடியோ

    பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப். 20ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    அமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கைஅமராவதி ஆற்றில் 6 பேர் இறப்புக்கு காரணமே இதுதான்.. திமுக மீது ஓ.பி.எஸ் பகீர் புகார்.. பரபர அறிக்கை

    இந்தச் சூழலில் பாட்டியாலா காளி கோவிலின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் வகையில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     ஒருவர் கைது

    ஒருவர் கைது

    பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காளி கோவிலில் இன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார், குற்றம் சாட்டப்பட்ட ராஜ்தீப் சிங் என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது ஐபிசி 295-A மற்றும் 354 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

     என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் காளி தேவியின் சிலை வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள நுழைந்து சிலையை கீழே தள்ள முயல்வது தெளிவாகத் தெரிகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி உடனடியாக அந்த நபரைக் கீழே தள்ளிவிடுகிறார். தேர்தலுக்கு சில வாரம் மட்டுமே உள்ள நிலையில், கோயிலில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     பஞ்சாப் முதல்வர்

    பஞ்சாப் முதல்வர்

    இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாபில் அசாதாரண சூழலை ஏற்படுத்தவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைத்துக் குழப்பத்தை உருவாக்கவும் சிலர் முயல்கின்றனர், அவர்கள் திட்டத்திற்குப் பலியாகிவிடாமல் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் காக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அனைத்து மதங்களையும் பாதுகாப்பதில் பஞ்சாபியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

     பாஜக

    பாஜக

    அதேநேரம் மற்ற எதிர்க்கட்சிகள் இதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளது. அதேபோல அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் எண்ணற்ற மத நிந்தனைகளில் இதுவும் ஒன்று என்றும் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டதாகச் சாடியுள்ளார்.

     அந்நிய சக்திகள்

    அந்நிய சக்திகள்

    இது குறித்து சுக்பூர் சிங் பாதல் மேலும் தனது ட்விட்டரில், "பாட்டியாலா காளி மாதா கோவிலில் நடந்த செயலை கண்டிக்கிறேன். இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்களில் வகுப்புவாத வெறுப்பைப் பரப்பப் பஞ்சாபிற்கு வெளியிலிருந்து வரும் சக்திகளின் முயல்கின்றனர். இது குறித்து நாங்கள் ஏற்கனவே எச்சரித்தோம். இப்போது அப்படியே நடக்கிறது. அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு இருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்,

    English summary
    A sacrilege attempt was made at a historic Kali temple in Punjab’s Patiala. Punjab election latest updates in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X