சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சித்துவுக்கே சித்துவேலை காட்டிய சன்னி..அப்பா ஜெயிக்கும் வரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் - சித்து மகள்

Google Oneindia Tamil News

சண்டிகர் : பஞ்சப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கடுமையாக சாடியுள்ள நவ்ஜோத் சிங் சித்துவின் மகள் ரபியா சித்து, சன்னியின் வங்கி கணக்குகளை ஆராய்ந்தால் 133 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் எனவும், அப்பா ஜெயிக்கும் வரை திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

பாஜகவிலிருந்து விலகி பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தாவிய நவ்ஜோத் சிங் சித்து கடந்த ஆண்டு பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அமரிந்தர் சிங் தரப்பு சித்து தரப்பு என இரு பிரிவாக காங்கிரஸ் கட்சியினர் பிரிந்து செயல்பட்டதால் அக்கட்சி பலவீனமடைந்தது தொடர்ந்து அமர்சிங் பதவி விலகினார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்வது என காங்கிரஸ் தலைமை குழப்பமடைந்தது. பல்வேறு பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அமரிந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல்

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பஞ்சாபில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. எனவே, அங்கு மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. இருப்பினும், பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் நவ்ஜோத் சிங் சித்து இடையே கடும் போட்டி நிலவியது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியால் முதல்வர் வேட்பாளரைக் கூட அறிவிக்க முடியாத அளவுக்குக் குழப்பத்தில் உள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடினர்.

காங். முதல்வர் வேட்பாளர்

காங். முதல்வர் வேட்பாளர்

இந்தச் சூழலில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டார். பஞ்சாபில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இது என்னுடைய முடிவு இல்லை. பஞ்சாப் மக்கள், இளைஞர்கள், செயற்குழு உறுப்பினர்களின் முடிவு என்றும் அவர் தெரிவித்தார். இதனால் சித்து கடும் திருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் பிரச்சாரத்திலும் அவர் ஆர்வம் காட்டவில்லை.

ரபியா சித்து

ரபியா சித்து

இந்நிலையில் முதல்வர் சன்னியை கடுமையாக சாடியுள்ள நவ்ஜோத் சிங் சித்துவின் மகள் ரபியா சித்து, சன்னியின் வங்கி கணக்குகளை ஆராய்ந்தால் 133 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் எனவும், அப்பா ஜெயிக்கும் வரை திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மகள் ரபியா சித்து, அமிர்தசரஸ் (கிழக்கு) தொகுதியில் தனது தந்தைக்காக பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ரபியா, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரும் தற்போதைய முதல்வருமான சரஞ்சித் சிங் சன்னியை கடுமையாக தாக்கி பேசினார்.

உண்மையில் சன்னி ஏழையா?

உண்மையில் சன்னி ஏழையா?

சன்னி கூறியது போல் அவர் உண்மையாக ஏழையாக இருக்கிறாரா என்று சந்தேகப்பட்டு அவரது கணக்குகளை சரிபார்க்க வேண்டும் என்றும், "சன்னி உண்மையில் ஏழையா? அவரது வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்தால், 133 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கண்டுபிடிக்கப்படும்" என்று கூறினார். பஞ்சாப் தேர்தல் 2022க்கான காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக பெயரிடப்பட்டதற்காக தனது தந்தை புறக்கணிக்கப்பட்டதற்காக ரபியா வருத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், ஒருவேளை காங்கிரஸுக்கு சில நிர்ப்பந்தங்கள் இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு நேர்மையான மனிதனை நீண்ட காலத்திற்கு தடுத்த நிறுத்த முடியாது என்றார்.

திருமணம் செய்ய மாட்டேன்

திருமணம் செய்ய மாட்டேன்

தனது தந்தைக்கும் மற்ற மாநிலக் கட்சித் தலைவர்களுக்கும் இடையே எந்த ஒப்பீடும் இல்லை என்று அவர் கூறிய ரபியா, பஞ்சாப் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஒருவரால் மட்டுமே (அவரது தந்தை) அதைக் காப்பாற்ற முடியும் என்றும், தனது தந்தையின் அரசியல் எதிரிகளும் மற்றவர்களும் அவர் பின்னடைவை நோக்கி இருப்பதை உறுதி செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். பஞ்சாப் இன்று இருக்கும் சூழ்நிலையால் சித்து வேதனைப்படுவதாகவும், தனது அப்பா வெற்றி பெறும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் கூறினார்.

English summary
As Punjab Chief Minister Saranjit Singh Sunny has been declared the Chief Ministerial candidate of Punjab, Rabia Sidhu, daughter of Navjot Singh Sidhu, who has slammed him, has said that if Sunny's bank accounts are checked, she will get Rs 133 crore and will not get married until her father succeeds.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X