போச்சு.. மானமே போச்சு.. போலீஸ்காரர் செய்த காரியத்தை பாருங்க.. கரெக்ட்டா வந்து நின்று ஆபீசர்கள்..!!
லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் பணத்தை வாயில் விழுங்க பார்த்தார்
சண்டிகர்: ஒரு போலீஸ்காரர் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிவிட்டார்.. திடீரென அதிகாரிகளை பார்த்ததும் என்ன செய்தார் தெரியுமா
அரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்தவர் ஷுப்நாத்.. இவர் ஒரு எருமை மாட்டினை வளர்த்து வந்தார்.. அந்த எருமை மாட்டை யாரோ திருடி சென்றுவிட்டனர்.
அதனால், எருமை மாட்டை கண்டுபிடித்து தரும்படி, போலீசில் புகார் தந்தார்.. ஆனால் மாட்டை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அதற்கு 10 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்டிருக்கிறார்.

லஞ்சப்பணம்
10 ஆயிரமா? என்று அதிர்ரந்த ஷூப்நாத், 6000 ரூபாய் கொடுத்துள்ளார்.. ஆனால், 10 ஆயிரம் முழுபணம் வேண்டும் என்று சப்இன்ஸ்பெக்டர் கறாராக சொல்லிவிட்டார்.. வேண்டுமானால், அந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தை அட்வான்ஸாக வைத்து கொள்வதாக சொன்னார்.. இதனால் மனம் நொந்துபோன ஷூப்நாத் நேராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகளும் திட்டமிட்டனர்... இதற்காக ஷுப்நாத்திடம் ரசாயனம் தடவிய பணத்தை தந்து, அதை சப் இன்ஸ்பெக்டரிடம் தர சொன்னார்கள்..

இன்ஸ்பெக்டர்
அதன்படியே ஷுப்நாத்தும் லஞ்சத்தை கொண்டுவந்து சப்-இன்ஸ்பெக்டரிடம் தந்தார்.. அந்த பணத்தை அவர் வாங்கும்போது, அதிகாரிகள் சப் இன்ஸ்பெக்டரை சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சப்-இன்ஸ்பெக்டர் ஒரு கணம் ஆடிப்போய்விட்டா.. கையில் உள்ள பணத்தை என்ன செய்வது என்று தெரியால், லபக்கென வாயில் போட்டுக் கொண்டு, அதை விழுங்கவும் முயற்சித்தார்.. இதை பார்த்து அதிகாரிகள் டென்ஷனாகிவிட்டனர்..

லபக் லபக்
வாயில் இருந்த அந்த பணத்தை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று முயற்சித்தனர்... ஆனால் அவர்களால் முடியவில்லை. இறுதியில் அவரை காரில் ஏற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்... இந்த சம்பவம் அப்படியே வீடியோவாகவும் வெளியாகிவிட்டது. அந்த வீடியோவில், சப்-இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்குவதும், அப்போது அதிகாரிகள் அவரை மடக்கி பிடிப்பதும், அவர்களை பார்த்ததும் பணத்தை அவசரம் அவசரமாக சப் இன்ஸ்பெக்டர் விழுங்குவதும் கேமராவில் பதிவாகி உள்ளது...

திணறல்
அதுமட்டுமல்ல, அந்த பணத்தை எப்படி அவர் வாயில் இருந்து எடுப்பது என்று அதிகாரிகள் திணறிவிட்டனர்.. அந்த அதிகாரிகளில் ஒருவர், பணத்தை மீட்க சப்-இன்ஸ்பெக்டரின் வாயில் விரல்களை நுழைக்கிறார்.. ஆனால் அந்த சப்-இன்ஸ்பெக்டரோ வாயை இறுக்கமாக மூடிக்கொண்டு, கொஞ்சம்கூட வாயை திறக்காமல், பணத்தை அப்படியே விழுங்குகிறார்... பிறகு, ஒருவழியாக அதிகாரிகள் போராடி, அந்த பணத்தை வெளியே தள்ளிவிட்டனர்... வாயில் விழுங்கிய மொத்த தொகை 4 ஆயிரம் ரூபாயாம்..!!!












Click it and Unblock the Notifications