கொடுமை.. தனியாக இருந்த தாத்தாவை.. நிர்வாண படம் எடுத்து மிரட்டிய 3 பெண்கள்.. இப்போ ஜெயிலில்..!
தாத்தாவை ஏமாற்றி 3 பெண்கள் பணம் பறித்துள்ளனர்
சண்டிகர்: ஒரு தாத்தாவை மிரட்டி, நிர்வாண வீடியோவும் எடுத்து பணம் பறிக்க முயற்சி நடந்துள்ளது.. இப்படி ஒரு காரியத்தை செய்தவர்கள் 3 இளம் பெண்கள்..!
Recommended Video
ஹரியானா மாநிலம் , யமுனா நகரில் புது ஹமிதா காலனி உள்ளது.. இந்த பகுதியில்தான் அந்த தாத்தா வசித்து வந்தார்.. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்..

மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.. கல்யாணம் ஆகி மகளும் மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.. இதனால் இந்த வயதான தாத்தா மட்டும் தனியாகவே அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், 3 பெண் போலீசார் திடீரென தாத்தா வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.. அவரது டிரஸ்ஸை கழட்டுமாறும் மிரட்டி உள்ளனர்.. இறுதியில் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்துவிட்டு, பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.. 5 லட்சம் ரூபாய் பணத்தை தரவில்லையானால், வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.
இதனால் பயந்துபோன தாத்தா, 50 ஆயிரம் ரூபாயை தந்துள்ளார்.. முதல்தவணையாக வைத்து கொள்கிறோம், மீண்டும் வருவோம் என்று சொல்லிவிட்டு 3 பேரும் கிளம்பி விட்டனர்.. இந்த சம்பவம் தொடர்பாக யமுனா நகர் போலீசில் தாத்தா புகார் தந்தார்.. முதலில் வீட்டிற்குள் ஒரு பெண்தான் போலீஸ் உடையில் வந்திருக்கிறார்..
அவர் வந்த அடுத்த 5 நிமிஷத்தில் மற்ற 2 பெண்களும் போலீஸ் உடையில் வந்து மிரட்டினார்களாம். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட 3 பெண்களையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்..!
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications