பஞ்சாபில் விவசாயிகள் மறியல் போராட்டம்.. நூற்றுக்கணக்கான ரயில் சேவை பாதிப்பு!
சண்டிகர்: பஞ்சாபில் வெள்ளத்தால் பயிர்கள் சேதம் அடைந்தததால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மூன்று நாள் ரயில் மறியல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் மான் உள்ளார். பஞ்சாப்பில் அண்மையில் கனமழை பெய்தது. இதில் பல ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம், குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் முழுவதும் 3 நாள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தின் அறிவித்தனர். அதன்படி நேற்று ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. நேற்று தொடங்கிய இந்த போராட்டம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இன்றைய போராட்டத்தில் விவசாயிகள் டிராக்டரில் போராட்ட களத்துக்கு வந்து தண்டவாளத்தில் அமர்ந்தனர். போலீசார் தடுக்க முயன்றாலும் அவர்கள் கேட்காமல் தண்டாவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் செய்தனர். இதனால் பல ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேலும் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டம் பஞ்சாப்பில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று 2-வது நாளாக ரயில் மறியல் போராட்டம் நீடித்து வருகிறது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக ரயில் சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளத்தை மறித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications