லோக்சபா தேர்தலுக்கு இடையே.. பாஜகவிற்கு பெரிய ஷாக்.. ஹரியானா அரசு கவிழ்ந்தது.. என்ன நடந்தது?
சண்டிகர்: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஹரியானாவில் பாஜக ஆட்சி கவிழ்ந்து உள்ளது, பாஜக அதன் கூட்டணிக் கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) உடனான கூட்டணியை முறித்துள்ளது.
இதையடுத்து சட்டசபையில் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) பாஜகவிற்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கியதால் அங்கே ஆட்சி கவிழ்ந்தது. முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

அதே சமயம் அமைச்சரவையை கலைத்து சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வருகின்றன.
ஹரியானா அரசு; முதலமைச்சர் மனோகர் லால் தலைமையிலான அரசுக்கு நாங்கள் ஏற்கனவே எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம். மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்தும் ஆலோசித்தோம். இங்கே பாஜக கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்று ஹரியானா சுயேட்சை எம்.எல்.ஏ., நயன் ராவத் தெரிவித்துள்ளார்.
ஹரியானா சட்டசபையில் மொத்தமாக 90 இடங்கள் உள்ளன. இங்கே ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இதில் பாஜக 41 இடங்களில் வென்று அங்கே 10 இடங்களை வென்ற ஜனநாயக் ஜனதா கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்து வந்தது.
இப்போது ஜனநாயக் ஜனதா கட்சி ஆதரவை வாபஸ் வாங்கியதால் 7 சுயேட்சைகள் மற்றும் 1 எம்எல்ஏ எச்எல்பி ஆதரவுடன் அங்கே மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஹரியானா முதல்வர் கட்டார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. முதல்வர் கர்னால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் முதல்வர் பதவிக்கு புதியவர் வரலாம் என்று கூறப்படுகிறது.
முந்தைய 2019 தேர்தலில் மாநிலத்தில் உள்ள அனைத்து 10 லோக்சபா தொகுதிகளையும் BJP வென்றது. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு JJP கட்சியுடன் கூட்டணி வைத்தது. இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் 5 இடங்களை JJP கட்சி கேட்டது. இந்த கூட்டணி முறிவால் அங்கே பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications