சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாயை விடுவானேன்.? மாட்டிக் கொள்வானேன்.? ராகுல் காந்தி தோல்வியால் சங்கடத்தில் சிக்கிய சித்து

Google Oneindia Tamil News

சண்டிகர்: அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு வேளை தோற்றுவிட்டால், நான் அரசியலை விட்டே விலகுவேன் என்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான சித்து தற்போது என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    Sidhu வீட்டு வாசலில் நிற்கும் போலீஸ்

    மக்களவை தேர்தல் முடிவுகளால் ஆட்சி மாற்றம் ஏதும் நிகழாத நிலையில் விரைவில் மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார் அதற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது

    When are you going to leave politics? questions followed to navjot singh sidhu

    இந்நிலையில் கேரளாவின் வயநாட்டில் வரலாற்று வெற்றி பெற்றிருந்தாலும், அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதிய ஜனதாவை சேர்ந்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடம் 55120 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்தார்

    பதிவான வாக்குகளில் 49.7 சதவீதம் அதாவது 4,68,514 வாக்குகளை பெற்று ஸ்மிருதி இரானி முதலிடம் பிடித்தார் ராகுல் காந்தி 43.9 சதவீதம் அதாவது 4,13,394 வாக்குகளை பெற்று தோல்வியுற்றார். இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கு முன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரசின் 70 ஆண்டு ஆட்சியில் நாட்டில் பொருளாதார வளர்ச்சி இல்லை என்று பாஜக கூறுவதை ஏற்க முடியாது.

    அதிமுகவின் கோட்டையை சல்லிசல்லியாக நொறுக்கிய கமல்.. கொங்கில் சிங்கமாக உருவெடுக்கும் மநீம!' அதிமுகவின் கோட்டையை சல்லிசல்லியாக நொறுக்கிய கமல்.. கொங்கில் சிங்கமாக உருவெடுக்கும் மநீம!'

    மத்தியில் ஆள்பவர்களுக்கு விஸ்வாசமாக இருந்தால் அவர்களை தேசியவாதி என்றும், ஆள்பவர்களை எதிர்த்து கேள்வி கேட்டால் தேச விரோதி என்றும் முத்திரை குத்துகிறார்கள் என சாடினார். மேலும் அவர் பேசியதிலேயே இது தான் ஹைலைட் . வரும் மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் தோற்றுவிட்டால், நான் அரசியலை விட்டே விலக தயார் என உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டார்.

    அவரது இந்த வார்த்தை தான் தற்போது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் எதிர்கட்சிகளால் அதிகம் கோடிட்டு காட்டப்படுகிறது. ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தோல்வியால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உள்ளார் சித்து.

    இந்நிலையில் சவால் விட்டபடி எப்போது பதவி விலகி அரசியலை விட்டு போக போறீங்க என, சமூக வலைத்தளங்களில் பலரும் கேட்கும் கேள்விகள் சித்துவை மேலும் தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது

    English summary
    The question of what is going to happen now is the Punjab Minister Sidhu's statement that if Rahul Gandhi falls in Amethi, I will quit politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X