ஹரியானாவின் புதிய முதல்வர் யார் தெரியுமா? அக்.,15ல் பதவியேற்பு விழா.. பிரதமர் மோடி பங்கேற்பு
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக வென்றுள்ளது. இதன்மூலம் ஹாட்ரிக் முறையில் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அக்டோபர் 15ம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளதாகவும், இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி புதிய முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது? என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
ஹரியானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக மனோகர் லால் கட்டார் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். எட்டரை ஆண்டுகள் மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செய்பட்டு வந்தார். கடந்த ஓன்றரை ஆண்டுகளாக அவர் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் ஹரியானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.
பல்வேறு கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்தன. ஆனால் கடந்த 8 ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் என்று அப்படியே மாறிப்போனது. ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தனிப்பெரும்பான்மை பெற 46 தொகுதிகளில் ஒரு கட்சி வெல்ல வேண்டும்.
அந்த வகையில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தியன் தேசிய லோக் தளம் கட்சி 2 தொகுதிகளிலும், 3 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இதில் இந்தியாவின் பணக்கார பெண் எம்எல்ஏவாக (சுயேச்சை) தேர்வாகி ள்ள சாவித்ரி ஜிண்டால் பாஜகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் பாஜகவுக்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 49 ஆக உள்ளது.
இந்நிலையில் தான் ஹரியானாவில் வரும் 15ம் தேதி பாஜக புதிய அரசை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் புதிய முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனியை நியமனம் செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளதோடு, அவரோடு சிலர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு மீண்டும் அமைச்சரவை என்பது விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள், பாஜக கூட்டணி கட்சி முதல்வர்கள், தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் வரும் 15ம் தேதி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள 10 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு பணியை தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹரியானாவில் கூட்டணியில் சேர்க்க மறுத்த காங்கிரஸை பழிதீர்த்த அகிலேஷ்- உபி இடைத்தேர்தலில் செம்ம கேம்!
முன்னதாக ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி 50 இடங்கள் வரை முன்னிலை வகித்தது. ஆனால் காலை 10.30 மணிக்கு பிறகு டிரெண்ட் மாறி பாஜக முன்னேறியது. இதனால் ஹரியானா வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பாஜகவினர் ஹேக் செய்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.
அதோடு தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளது. அதில் 20 தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்துவிட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள பாஜக முதல்வர் பதவியேற்புக்கான பணியை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்?












Click it and Unblock the Notifications