"உடலுறவு".. 35 வயசாகுது.. கோர்ட்டுக்கு ஒரே ஓட்டம்.. நீதிபதி கேட்ட கேள்வியால் அதிர்ந்து நின்ற டீச்சர்
சண்டிகர்: மாணவனுடன் உடல்உறவு கொண்டதுடன், கோர்ட்டிலும் அசிங்கப்பட்டு போனார் அந்த பெண் பேராசிரியர்.. அதுவும் நீதிபதி, கேட்ட நறுக் நறுக் கேள்விகளால், நிலைகுலைந்தே போய்விட்டார் அந்த பெண்.
ஹரியானா மாநிலம் குர்கானில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்க்கிறார் அந்த பெண்.. 35 வயதாகிறது.. இதே பல்கலைக்கழகத்தில், இவரிடம் பயின்ற ஒரு மாணவரிடம் நெருங்கி பழகியிருக்கிறார்.

மாணவர்: அந்த மாணவர், இந்த பெண் பேராசிரியரை கல்யாணம் செய்து கொள்வதாக சொன்னாராம். உடனே இந்த பெண்ணும், மாணவரிடம் எல்லைமீறி நெருக்கம் கொண்டாராம்.. இறுதியில், அந்த மாணவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கூறி, போலீஸுக்கு புகாருடன் ஓடினார் பெண் பேராசிரியை.
அந்த புகார் மனுவில், "கடந்த வருடம் பிப்ரவரி மாதம்தான், காலேஜில் முதன்முதலில் மாணவரை சந்தித்தேன். அவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த வருடம் மே மாதம், நாங்கள் 2 பேருமே மணாலிக்கு சென்றோம்.. அங்கிருக்கும் ஒரு கோயிலில், என்னை அந்த மாணவர் கல்யாணம் செய்துகொண்டார். இருந்தாலும், சட்டப்பூர்வமாக கல்யாணம் செய்துகொள்வதாகவும் சத்தியம் செய்தார்.
2 முறை கர்ப்பம்: இந்நிலையில், கடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில், நான் 2 முறை கர்ப்பமானேன்.. இதை பற்றி மாணவரிடம் நான் சொன்னதுமே, அவர் என்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.. உடனே நான், அம்மாணவனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து புகார் சொன்னேன். அதற்கு அவர்கள், அபார்ஷன் செய்யுமாறு என்னை கட்டாயப்படுத்தினார்கள். எனவே, ஏமாற்றிய மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, இந்த புகாரின் அடிப்படையில் குர்கான் போலீசாரும், சம்பந்தப்பட்ட மாணவன் மீது பாலியல் வன்கொடுமை, கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது..
ஹைகோர்ட்: இதனால், தன்னை போலீஸார் கைது செய்துவிடக்கூடாது என்பதற்காக, டெல்லி ஹைகோர்ட்டில் மாணவர் தரப்பில் முன்ஜாமீன் கோரப்பட்டது. இந்த முன்ஜாமீன் வழக்கு விசாரணைக்கும் வந்தது.. அப்போது நீதிபதி கூறும்போது, "பேராசிரியருக்கு 35 வயதாகிறது.. பி.ஹெச்டி முடித்திருக்கிறார் என்பதால், நிச்சயம் உயர்கல்வி அறிவை கொண்டவராகத்தான் இருப்பார்.. அதுவும், மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில், பலம்வாய்ந்த பேராசிரியர் பணியிலும் இருக்கிறார்..
ஆனால், முன்ஜாமீன் கோரியுள்ளவரோ, அங்கு படிக்கும் மாணவர்.. அவ்வளவுதான்.. இவர்கள் 2 பேருக்கும் இடையிலானது குரு - சிஷ்யன் உறவு முறையாகும்.. மாணவனுக்கு 20 வயதாகிறது. 20 வயது மாணவனுடன் நெருங்கி பழகும் நேரத்தில், தான் ஏற்கனவே திருமணமானவர் என்பதையோ, மாணவனைவிட, தனக்கு வயது அதிகம் என்பதையோ பேராசிரியை நிச்சயம் மறந்திருக்க முடியாது.
உடலுறவு: மாணவனுடன் பேராசிரியர் உடலுறவில் ஈடுபட்டதுடன், கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அதை தொடந்திருக்கிறார்.. மாணவனுடன் கட்டாயத்தின்பேரில் இல்லாமல், தாமாகவே முன்வந்து உறவிலும் இருந்திருக்கிறார்.
மாணவர் போன்ற வயதிலிருப்பவர்களுடன் தொடர்பில் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேராசிரியருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்" என்று கூறிய நீதிபதி, வழக்கின் சூழ்நிலைகள் அடிப்படையில் மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications