தமிழகத்தில் இன்று மேலும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு- 12 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை தொடும் நிலையில் உள்ளது. இன்றைய நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,78,769. மேலும் 95,20,760 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தும் உள்ளனர்.

தமிழகம் 4-வது இடம்
இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,44,834 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவுக்கு அடுத்ததாக 4-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

இன்று 1,134 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 74,957 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,30,12,168 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,04,650 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 12 பெஎர் பலி
இன்று மட்டும் தமிழகத்தில் மொத்தம் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,954.

1,170 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,170. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,82,915.

சென்னையில் 341 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 9,781 மட்டும். மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று மேலும் 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கோவையில் 115; செங்கல்பட்டில் 69; திருவள்ளூரில் 51 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது.
-
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications