தமிழகத்தில் கொரோனா உச்சம்- 2-வது நாளாக ஆயிரத்தை தாண்டியது- ஒரே நாளில் 1,162 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு உச்சமடைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது ஒருநாள் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியதாக இருக்கிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23, 495
நேற்று ஒருநாள் பாதிப்பு 1,149 ஆக இருந்தது. இன்று மட்டும் தமிழகத்தில் 1162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23, 495 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 50 பேர் ரயில்கள் மற்றும் விமானம் மூலம் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள்.

11 பேர் பலி
தமிழகத்தில் இன்று மட்டும் 11 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். இதனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் 184 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இன்று 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை. சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 964 ஆகும். இதனால் ஒட்டுமொத்தமாக சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை என்பது 15,770 ஆக உயர்ந்திருக்கிறது.

மாவட்டங்களில் பாதிப்பு
இன்று மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்: செங்கல்பட்டு 48; கடலூர்-1; திண்டுக்கல் -5; காஞ்சிபுரம்- 9; கன்னியாகுமரி-2 ; நீலகிரி- 1; பெரம்பலூர்- 1; புதுக்கோட்டை- 1 ; ராமநாதபுரம்-2; ராணிப்பேட்டை-5; சேலம்- 10; தென்காசி-2; தஞ்சாவூர்-4; திருப்பத்தூர்-1; திருவள்ளூர்- 33; திருவண்ணாமலை -10; தூத்துக்குடி 1; திருநெல்வேலி- 1; வேலூர்- 3; விழுப்புரம்- 8

இன்று 413 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று மட்டும் 413 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 72 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 43 அரசு பரிசோதனை மையங்களாகும்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications