தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று 1,181 பேருக்கு தொற்று உறுதி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று மட்டும் 1,181 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,02,342 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,931.
தமிழகத்தில் இன்று 1240 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7,80, 531 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் 9,880 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சென்னையில்தான் இன்று அதிகபட்சமாக 344 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து கோவையில் 111 பேருக்கும் செங்கல்பட்டில் 74 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications