புறம்போக்கு நிலம்.. சென்னை அருகே நீர்நிலையில் ரூ.150 கோடியில் 1.65 ஏக்கரை மீட்ட சென்னை தாசில்தார்
சென்னை: அரசு நீர்நிலை புறம்போக்கு இடத்திலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததையடுத்து, ஆவடி தாசில்தார் உதயம் தலைமையிலான வருவாய் துறையினர், 150 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு அதிரடியாக தற்போது நிலத்தை மீட்டுள்ளனர். என்ன நடந்தது சென்னையில்?
அரசுக்கு சொந்தமான நிலத்தையே புறம்போக்கு நிலம் என்கிறோம்.. தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு என பொதுவாக உள்ள நிலங்கள் எல்லாம் இதில் அடக்கமாகும்.

ஆனாலும், 5 ஆண்டுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தை வைத்திருந்தால், அந்த நிலம் அரசுக்கு தேவையில்லாததாக இருந்தால், அந்த நிலத்தை சம்பந்தப்பட்டவர்கள் உரிமை கொள்ளலாம். இவர்கள் புறம்போக்கு நிலத்திற்கான பட்டா பெறுவதற்கு தகுதியானவர் என கருதப்படுவார்கள். அதாவது, அரசு பயன்பாட்டிற்கு தேவையில்லையென்றால், இவைகளுக்கு பட்டாக்கள் உண்டு. என்றாலும், அதை அரசுதான் முடிவு செய்யும்.
புறம்போக்கு நிலம்: அதேபோல, அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலோ அல்லது, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு தொடர்பாக பலமுறை தகவல் அளித்தும் சம்பந்தப்பட்டவர்கள் காலி செய்ய மறுத்தாலோ, அவர்கள் மீதும் வருவாய்த்துறையினர் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்புகூட, கோவையில், ஆக்கிரமித்து வைத்திருந்த 2 கோடி மதிப்புள்ள இடத்தை மீட்டிருந்தனர்.
இந்நிலையில், சென்னை ஆவடியிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், மணிகண்டபுரம், சிடிஎச் சாலையில், கணக்கன் குட்டை என்ற அரசு நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது... இதில், 1.68 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, தங்கம் ஹார்டுவேர்ஸ், ஜெய்சக்தி டிம்பர்ஸ் என்ற 2 நிறுவனங்கள், கிடங்கு, லேத் பட்டறை, பார்க்கிங் என பயன்படுத்தி, மிச்ச இடத்தில், 20 வீடுகள் உடைய தனியார் குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன.
ஜப்தி நோட்டீஸ்: இந்நிலையில், அங்கு கடை வைத்திருந்த ஒருவர், தன்னுடைய கடையை காட்டி வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார். ஆனால்,கடனை சரியாக கட்டாததால், வங்கி நிர்வாகம், 2012ல், சென்னை ஹைகோர்ட்டுக்கு போனது.. இறுதியில், சம்பந்தப்பட்ட கடைக்கு ஜப்தி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் எதிர் தரப்பில், அப்பீலுக்கு போனார்கள்..
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வருவாய் துறைக்கு உத்தரவிட்டது. வருவாய் துறையும் இது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்டது. அப்போதுதான், அந்த இடம், அரசு நீர்நிலை புறம்போக்கு இடம் என்பது தெரிந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கடந்த 6ம் தேதி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஹைகோர்ட், உத்தரவிட்டது.
அரசு நிலம் மீட்பு: இந்த நீதிமன்ற உத்தரவையடுத்து, ஆவடி தாசில்தார் உதயம் தலைமையிலான வருவாய் துறையினர், 1.68 ஏக்கர் பரப்பில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 9 வணிக கட்டிடங்களை பொக்லைன் வைத்து இடித்து தள்ளினார்கள்.. இப்போது 150 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது..!!












Click it and Unblock the Notifications