10,11,12ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே பொதுத்தேர்வு -தேர்வுத்துறை அறிவிப்பு
10, 11, 12ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படியே பொதுத்தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
சென்னை: 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே, மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு / இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022 க்கான வினாத்தாள்கள் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆரம்பம் முதலே பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து வந்தார்.
அதே போல், ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா மூன்றாம் அலை மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. அதன் படி, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்து தளர்த்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுத்தேர்வுகள்
தமிழகத்தில் இந்தாண்டு 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி அதன்படி 12ஆம் வகுப்புக்கு மே 5ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், 11ஆம் வகுப்புக்கு மே 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகள் எப்போது
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகிறது.
இந்நிலையில் 10,11, 12 ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே பொதுத்தேர்வு என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறைக்கப்பட்ட பாடத்திட்டம்
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "2021-2022-ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே, மேல்நிலை (முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு) / இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு, மே 2022- க்கான வினாத்தாள்கள் வழங்கப்படும்.

செய்முறைத் தேர்வுகள்
10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் முதலில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதனுடன், மே 4 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications