ஒரேநாளில்"லாக்" செய்த ஸ்டாலின்.. அப்ப தமிழக ஆளுநருக்கு வேற வழியே இல்லையா? அனலடிக்குது கிண்டி
சென்னை: இன்று சட்டசபையில் நடந்துவரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும், மிகப்பெரிய எதிர்பார்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது..!!!
முந்தைய தமிழக ஆளுநர்களை போல, தற்போதைய ஆளுநர் ரவி கிடையாது.. 10 வரும் கழித்து, இந்த முறை திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற சமயத்தில்தான், ஆளுநர் ரவியும், புதிதாக இங்கு பொறுப்பேற்றார்.

திமுக அரசுக்கு செக் வைப்பதற்காகவே, இந்த ஆளுநர் நியமனம் நடந்ததாக, அப்போது முணுமுணுக்கப்பட்டது. அதற்கேற்றபடி, பதவியேற்றதில் இருந்தே, ஆளுநர் ரவியின் பரபரப்புகள், தமிழக அரசை களத்தை கொதி நிலையிலேயே வைத்து வருகின்றன. சிலசமயம் ஆளுநரின் சர்ச்சை பேச்சுகளும், அந்த சர்ச்சைகளுக்கு ஆளும் கட்சியின் பதிலடிகளும், தமிழக களத்தில் கூடுதல் அனலை மூட்டிவருகிறது.
நீட் தேர்வு: நீட் தேர்வு விலக்கு மசோதா முதல் 7 தமிழர் விடுதலை விவகாரம்வரை ஆளுநரின் செயல்பாடுகளை, அதிர்ந்தும், இடிந்தும்போன திமுக கூட்டணி, சரிக்சரியான பதிலடிகளை தொடர்ந்து தந்து வருகிறது. இதோ இப்போதும், அப்படியொரு சூழலை, திமுக அரசு எதிர்கொண்டுள்ளது.
தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு, கவர்னர் அலுவலகத்தில் எளிதாக எதற்குமே ஒப்புதல் கிடைத்து விடுவதில்லை... அதுபோலவே, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கும், அவ்வளவு எளிதாக, அவர் ஒப்புதல் தந்துவிடுவதில்லை.. அந்த வகையில் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதன்காரணமாகவே, தமிழக அரசு சார்பில் கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது.
கண்டனம்: கவர்னரின் நடவடிக்கைகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டும் தன்னுடைய கண்டனத்தை வலிய பதிவு செய்துள்ளது. இதன் அடுத்த கட்ட விசாரணை 20-ந்தேதி வருகிறது. சட்டரீதியான நகர்வுகள் ஒருபக்கமிருக்க, அரசியல் நிகழ்வில் சூடுபிடித்துள்ளது.
சட்டசபையில் ஏற்கனவே தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பியிருந்த 10 சட்ட மசோதாக்களை கவர்னர் ரவி, அரசுக்கே திருப்பி அனுப்பியிருந்தார்.. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம், கவர்னரிடமே உள்ள நிலையில், அதை தமிழக அரசுக்கு மாற்றும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது.. அது தொடர்பான மசோதாக்களைத்தான், ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார் கவர்னர்.
திருப்பி அனுப்பினார்: அதுமட்டுமல்ல, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவது தொடர்பான சட்ட மசோதாவில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என்று கேள்வி எழுப்பியதுடன், அதையும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்.
இது திமுக அரசுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக ஆலோசனையில் ஈடுபட்டார் முதல்வர் ஸ்டாலின்.. இந்த 10 சட்ட மசோதாக்களை மீண்டும் 2-வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பவும் முடிவுசெய்து, இதற்காகவே, சிறப்பு சட்டசபையை கூட்டுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
கூடுகிறது சட்டசபை: அதன் பேரில்தான், இன்றைய தினம் காலை 10 மணிக்கு சபை கூடும் என்று சபாநாயகர் அப்பாவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இன்று சட்டசபையில் நிறைவேற்றப்படும் 10 மசோதாக்களும் சட்டசபை கூட்டம் முடிந்ததும் சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆளுநருக்கு எதிராக உள்ளதால், இன்றைய சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை பாஜக எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.. எனினும், இன்றைய மசோதா விவகாரத்தில், தர்மசங்கட சூழலுக்கு தமிழக பாஜக ஆளாகி உள்ளதாக தெரிகிறது.
மீண்டும் திருப்பி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் தாமதம் செய்யாமல், உடனடியாக ஒப்புதல் தரவேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டும் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதுடன், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்ற "வார்த்தையையும்" சுப்ரீட் கோர்ட் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது. எனவே, ஆளுநர் தரப்புக்கும் இன்றைய தினம், புது நெருக்கடி உருவாகியுள்ளது.
சிக்கல்: ஒருவேளை ஒப்புதல் தராமல் போனால், வரும் 20ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில், கூடுதல் நெருக்கடிகள் உருவாகிவிடும் சூழலும் உள்ளது. எப்படி பார்த்தாலும், அன்று நீட் தேர்வு மசோதாவுக்கு ஒப்புதல் தந்ததை போலவே, இன்றைய மசோதாக்களும் ஒப்புதல் தந்தாக வேண்டிய சூழலை, இன்று ஆளுநர் மாளிகைக்கு ஏற்படுத்தியிருக்கிறது, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் அரசு.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications