ஊட்டியில் விருப்பம் போல பயணிக்க 10 பஸ்கள்.. முதல்வரின் அறிவிப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 10 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கூடுதலாக ரூ.20 கோடியில் வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டும் ஊட்டிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், கொடைக்கானலில் வார நாட்களில் 4 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும் மட்டும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதனை மறு ஆய்வு செய்யக் கூறி நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சமீபத்தில் ஊட்டி சென்ற முதல்வர், ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் விருப்பம் போல் பயணம் செய்யும் வகையில் 5 கோடி ரூபாய் செலவில் 10 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், 20 கோடி ரூபாய் செலவில் வாகன நிறுத்தம் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பாராட்டும், வரவேற்பும் தெரிவித்த நீதிபதிகள், வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை உரிய தரவுகளோடு மனுவாக தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications