சுதந்திர தினம்...தேசியக் கொடியின் பிறப்பு... வடிவமைத்தவர்... ஸ்வாரஸ்ய தகவல்கள்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாடு 74வது சுதந்திர தினத்தை நாளை கொண்டாட தயாராகி வருகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் முதல் தேசியக் கொடியை செங்கோட்டையில் பறக்கவிட்டவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. தேசியக் கொடி, நாட்டில் ஒவ்வொருவரின் கவுரவமாகவும், நம்பிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

''நமக்கு கிடைத்த சுதந்திரத்தின் அடையாளமாக தேசியக் கொடியை பார்க்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் கிடைத்த சுதந்திரமாக பார்க்க வேண்டும்'' என்று மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்து இருந்தார். இந்த தேசியக் கோடி எப்படி பிறந்தது என்று பார்ப்போம்:
- இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்காலி வெங்கையா. ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி
- தேசியக் கொடி 1947, ஜூலை 22ல், நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சற்று முன்னதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- முதல் இந்திய தேசியக் கொடி 1906ல் ஆகஸ்ட் 7ஆம் தேதி பறக்கவிடப்பட்டது. கொல்கத்தாவில் இருக்கும் பார்சி பாகன் ஸ்கொயரில் ஏற்றப்பட்டது. பச்சை, மஞ்சள், சிவப்பு நிறத்தில் மூன்று கிடைமட்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. இது பழைய வடிவம்.
- கொடியில் இருக்கும் காவி நிறம் தியாகம், தைரியத்தை குறிக்கிறது. வெள்ளை நிறம் உண்மையை குறிக்கிறது. பச்சை நிறம் வளத்தை குறிக்கிறது. கொடியின் நடுவில் இருக்கும் அசோக சக்கரம் தர்மத்தை குறிக்கிறது.
- கொடியில் இருக்கும் அசோகா சக்கரத்தில் சமவெளி இடைவெளியில் 24 கோடுகள் உள்ளன.
- காதி துணியால் தேசியக் கொடி உருவாக்கப்படுகிறது. கையால் நெசவு செய்யப்பட்ட, காட்டன் மற்றும் பட்டு துணியால் தேசியக் கொடியை மகாத்மா காந்தி நெசவு செய்து இருந்தார்.
- இந்தக் கொடியை தயாரிக்கும் உரிமை காதி வளர்ச்சி மற்றும் கிராம தொழிற்சாலை கமிஷனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மற்ற ஏஜென்சிகளுக்கு பிரித்து வழங்குகின்றனர்.
- 1953, மே 29 ஆம் தேதி முதன் முறையாக இந்திய தேசியக் கொடியை எவரெஸ்ட் மலையில் டென்சிங் நார்கை ஏற்றினார்.
- 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தேசியக் கொடியை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மற்ற நாட்களில் ஏற்றக் கூடாது. ஆனால், 2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும்போது தேசியக் கொடியை ஏற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.
- பகல் நேரத்தில் மட்டுமே தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். அதன் மீது வேறு எந்த அடையாளங்களும் இருக்கக் கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications