அரசியல் சார்பு கூடாது: தமிழக ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் 10 அம்சங்கள்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடியான தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தார்; ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று நாட்டையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தது.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இன்றைய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- அரசியலமைப்பு படியே ஆளுநர் செயல்பட வேண்டுமே தவிர அரசியல் சார்போடு செயல்படக்கூடாது
- மாநில அரசின் ஆலோசனைகள் படியே ஆளுநர் செயல்பட முடியும்
- ஆளுநருக்கு என தனிப்பட்ட VETO அதிகாரம் இல்லை
- தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிரானது
- தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை
- தமிழ்நாடு ஆளுநர் ரவி, சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்
- தமிழ்நாடு ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல்
- ஆளுநர் சட்டவிரோதமாக அனுப்பிய 10 மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் ரத்து.
- சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.
- மாநில அரசு நிறைவேற்றி அனுப்புகிற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்.
-
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications