தமிழ்நாட்டு பழங்குடி பெண்களால் தேசம் உத்வேகம்.. பிரதமர் மோடி மனதின் குரல் உரையின் 10 பாயிண்டுகள்!
சென்னை: தமிழ்நாட்டு பழங்குடி பெண்களின் சுடுமண் கோப்பைகள் ஏற்றுமதியால் தேசம் உத்வேகம் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தமது 100-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். மனதின் குரல் என்ற பெயரிலான இந்த நிகழ்ச்சி 100-வது அத்தியாத்தை இன்று எட்டியது. இதனையொட்டி உலகம் முழுவதும் பிரதமர் மோடியின் 100-வது வானொலி நிகழ்ச்சியை அனைவரும் கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இன்றைய வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்த சில கருத்துகள்:
- ஒட்டுமொத்த மக்களின் உணர்வுடன் கூடிய சிறப்பு பயணம் மனதின் குரல் நிகழ்ச்சி
- அரசின் திட்டங்கள் மக்கள் இயக்கமாக உருவெடுப்பதற்கு மனதின் குரல் நிகழ்ச்சி ஒரு பாலமாக அமைந்தது.
- அயல்பாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு முன் நாட்டில் குறைந்தது 15 சுற்றுலா இடங்களுக்கு செல்ல வேண்டும்.
- நமது இயற்கை ஆதாரங்கள், நதிகள், மலைகள், குளங்கள், புனித தலங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருப்போம்.
- தமிழ்நாட்டின் பழங்குடி இனப் பெண்கள் சூழலுக்கு நேசமான சுடுமண் கோப்பைகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் தேசம் உத்வேகம் பெற்றுள்ளது.
- மனதின் குரல் நாட்டின் பெண் சக்தியின் உத்வேகம் அளிக்கக் கூடிய பல நிகழ்வுகளைப் பற்றி பேசி உள்ளது.
- இந்திய ரக நாய்கள் தொடர்பான விழிப்புணர்வை மனதின் குரல் தொடங்கி வைத்தது
- நானல்ல நீதான் நான் என்ற நற்பதிவுப் பயிற்சியே மனதின் குரல்; இதில் நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்கள் இணைந்தார்கள்.
- ஆகாசவாணியின் நண்பர்களுக்கு என் நன்றி; மிகவும் குறைவான காலத்தில் விரைவாக மனதின் குரலை பல்வேறு மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றி. தூர்தர்ஷன், மை கவ் இன் நண்பர்களுக்கு நன்றி.
- மனதின் குரலை வழிநடத்தும் பாரத நாட்டு மக்கள், பாரதம் மீது நம்பிக்கை வைத்திருப்போர் அனைவருக்கும் என் நன்றி












Click it and Unblock the Notifications