பதறிய அண்ணாமலை.. உள்ளே வந்த அமித் ஷா.. டெல்லியில் அடுத்தடுத்த 10 சம்பவங்கள்.. நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் உச்சபட்ச பதற்றம் தற்போது ஏற்பட்டு உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ளார். இந்த டெல்லி பயணத்தில் என்ன நடந்தது என்பதை பின் வரும் 10 பாயிண்டுகளில் பார்க்கலாம்.
1. பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு சென்றார். அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பிரிவால் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். ஞாயிற்றுக்கிழமை மதியம் அவர் அங்கே பயணம் செய்தார்.
2. முதல் நாள் அவரால் யாரையும் சந்திக்க முடியவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் அமித் ஷா, நட்டாவை ஞாயிற்றுக்கிழமையே சந்திக்கலாம் என்ற திட்டத்தில் இருந்தார். ஆனால் அமித் ஷா 5 மாநில தேர்தல் பணிகளில் பிசியாக இருந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடியவில்லை.

3. அண்ணாமலை கையில் ஒரு ரிப்போர்ட்டை கொண்டு சென்றார். இதனால் மறுநாளும் அண்ணாமலை காத்திருக்க வேண்டி இருந்தது. கூடுதல் நாள் அங்கே அண்ணாமலை தங்க நேரிட்டதால் நண்பர் ஒருவர் வீட்டில் அவர் ஓய்வு எடுத்தார். அந்த நண்பர் தேஜஸ்வி சூர்யா எம்பி. டெல்லியில் உள்ள அவரின் வீட்டில் அண்ணாமலை தங்கி உள்ளார். இவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பது கூறப்படுகிறது.
4. இந்த நிலையில்தான் இரண்டாவது அண்ணாமலை நேற்று அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இதில் பாஜக - அதிமுக மோதல் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். முக்கியமாக அதிமுக உடன் கூட்டணியை முறித்தது ஏன் என்று அண்ணாமலை நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் அளித்துள்ளார்.
( வானதி பயணத்தை நிறுத்த.. அண்ணாமலை நிர்மலாவை பார்க்க.. நடைபயணம் தள்ளிப்போக.. கடைசியில் )
5. இன்னொரு பக்கம் அண்ணாமலை தொடர்பாக நிர்மலா சீதாராமன் வேறு ஒரு அறிக்கை தயார் செய்தார். நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜகவில் நிலவும் விஷயங்கள் குறித்து விசாரணை செய்துள்ளார். அதோடு நிற்காமல் அவர் தமிழ்நாடு பாஜக எப்படி உள்ளது? கட்சியின் பலம் என்ன? பலவீனம் என்ன? கட்சி அதிமுகவோடு கூட்டணி வைத்தால் வெற்றிபெறுமா? அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் என்ன பலன்? என்ன பிரச்சனை என்பதை எல்லாம் ரிப்போர்ட்டாக் டெல்லி அனுப்பி உள்ளாராம். இந்த நிலையில்தான் அண்ணாமலையிடம் இதை பற்றி நிர்மலா சீதாராமன் விசாரணை செய்துள்ளாராம்.,
6. இதேபோல் இன்னொரு பக்கம் பாஜகவின் டாப் தலைகள் முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். நட்டா, அமித் ஷா 5 மாநில தேர்தல் பணிகளில் பிசியாக இருந்தனர். இதில் தீவிர ஆலோசனைகளை செய்தனர்.
7. நிர்மலா கூட்டத்தில் அண்ணாமலை முக்கியமான விஷயங்களை ஆலோசனை செய்தார். முக்கியமாக தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஏன் வேண்டாம் என்பதை நியாயப்படுத்தும் விதமாக அண்ணாமலை ஒரு ஃபைலை எடுத்து சென்றுள்ளார். அதிமுக கூட்டணி ஏன் தேவையில்லை. அதிமுக கூட்டணி இல்லாமலே பாஜக எப்படி வெல்ல முடியும். பாஜக வாக்கு வங்கி என்ன? பாஜக எப்படி கூட்டணி அமைக்க வேண்டும்? யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும்? என்பதை லிஸ்ட் போட்டு அண்ணாமலை பெரிய டேட்டாவுடன் கொண்டு சென்றுள்ளார்.
( டெல்லியில் "அவர்" வீட்டில் தங்கிய அண்ணாமலை.. கையில் என்னங்க அது? அப்போ அதிமுக.. மொத்தமா க்ளோஸ்?)
8. இதையடுத்துதான் அமித் ஷாவை சந்தித்தார் அண்ணாமலை. இதிலும் அந்த பைல் பற்றி அண்ணாமலை விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
9. இன்னொரு பக்கம் வானதி சீனிவாசனும் கடைசி நேரத்தில் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளாராம்.
10. இதையடுத்துதான் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகலாம்என்கிறார்கள் .
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications