TTV தினகரன் 10 எம்எல்ஏ! விஜய் களமிறக்கிய எதிர்பாராத 3வது அணி? எந்தெந்த கட்சிகள் வருது? பயங்கர பிளான்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணி உருவானால் தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
டிடிவி தினகரன் இந்த தேர்தலில் அமமுக 10 எம்எல்ஏக்களை வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து உள்ளாராம். இந்த டார்கெட்டை மனதில் வைத்தே டிடிவி விஜயுடன் கூட்டணி வைக்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம்.

டிடிவி கணக்கு என்ன?
கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 18% வாக்குகள் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் பங்களிப்பால் கிடைத்தது. இந்த இரு தலைவர்களும் அதிமுகவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் உடன் இணைந்தால் முக்குலத்தோர் வாக்குகளை தமிழக வெற்றி கழகத்திற்கு மாற்ற முடியும். நடிகர் விஜய் சரியான தொகுதியை தேர்ந்தெடுத்தால் தென் தமிழகத்தில் வெற்றி கூட பெற முடியும். தற்போது பாஜக கூட்டணியில் உள்ள அமமுக - அதிமுக இடையே உரசல் ஏற்பட்டு உள்ளது.
பாஜக கூட்டணியிலும், பாஜக உள்ளேயும் கடுமையான உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து அமமுக டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியேறினர். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இவர்கள் வெளிப்படையாக் அறிவித்தனர்.
இதையடுத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அண்ணாமலை சந்தித்து கடந்த சில வாரங்களுக்கு முன் பேசினார். சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பானது நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு அண்ணாமலை வலியுறுத்தியதாக தகவல் வெளியானது. சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியானது. இந்த சந்திப்பில் பல முக்கியமான விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. ஆனால் நிலைப்பாட்டை மாற்றாத டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைய மாட்டோம்.. அப்படியே இணைந்தாலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று அறிவித்தார்.
உருவாகும் புதிய கூட்டணி
இப்படிப்பட்ட நிலையில்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்த கூட்டணி உருவானால் தென் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.
மேலூர் தொகுதியில் விஜய் நிச்சயமாக வெற்றி பெறலாம். நாடார் சமூகத்தின் ஆதரவு இருந்தால் திருநெல்வேலியிலும் முயற்சி செய்யலாம். ஏற்கனவே பாமகவும் தமிழக வெற்றி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்ற பேச்சு நிலவுகிறது. ஆனால் அவர்களின் முதல் விருப்பம் அதிமுக தான். எடப்பாடி பழனிசாமி எந்த விலை கொடுத்தும் பாமகவை விட்டுக்கொடுக்க மாட்டார். ஏனெனில் சேலத்தில் மற்றும் சில வடமாவட்டங்களில் வெற்றி பெற அவருக்கு பாமகவின் ஆதரவு தேவை. எப்படியாவது அவர்களை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்வார்.
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால், கூட்டணி மூன்றாம் இடத்தைப் பிடிப்பதை உறுதி செய்ய முடியும். அதே சமயம் கடுமையாக அதிமுகவின் வாக்கு வங்கியை உடைக்கவும் முடியும்.
இதனால் அதிமுகவின் வாக்குகளை தவெக உடைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழக வெற்றி கழகம், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டணி அமைந்தால், திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவது ஏறக்குறைய உறுதியாகிவிடும்.












Click it and Unblock the Notifications